why

பல கோடி இளம் முதலீட்டாளர்களைக் குறுகிய காலகட்டத்திற்குள் பெரிய அளவில் ஈர்க்க கிரிப்டோகரன்சி கடந்த ஒரு வாரமாக அதிகளவில் சரிந்து வந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கணிசமாக உயர்ந்தது.

ஆனால் திங்கட்கிழமை மீண்டும் சரிய துவங்கியதால் சிறு மற்றும் நடுத்தர ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளனர்.

ஆனால் இன்றைய சரிவுக்கு மிகவும் முக்கியமான சில காரணங்களும் உண்டு.

பாங்க் ஆஃ பிரான்ஸ்

பாங்க் ஆஃ பிரான்ஸ் கவர்னர் ஃபிரான்கோயிஸ் வில்லேராய் டி கல்ஹவ் திங்களன்று நடந்த மாநாட்டில், கிரிப்டோ சொத்துக்கள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டாலும், அதிகார வரம்புகள் முழுவதும் நிலையானதாக இல்லாவிட்டாலும், பொருத்தமான முறையில் இயங்கக்கூடியதாக இல்லாவிட்டாலும் சர்வதேச நிதி அமைப்பைச் சீர்குலைக்கும் என்று கூறினார்.

ஸ்டேபிள்காயின்

 மேலும் அவர் ஸ்டேபிள்காயின்-க்கு தவறாகப் பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஃபேபியோ பனெட்டா திங்களன்று கூறுகையில் ஸ்டேபிள்காயின்-களை இயக்குவதிலும் பாதிப்பு உள்ளது எனக் கூறினார். இதன் மூலம் ஐரோப்பிய அதிகாரிகள் கிரிப்டோகரன்சிகளால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய மீண்டும் எச்சரித்துள்ளனர்.

 

பிட்காயின்

இதற்கிடையில் தான் அதிகரிக்கும் பணவீக்கம், வட்டி விகிதம் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றின் எதிரொலியாகப் பிட்காயின் விலை இன்று காலை வர்த்தகத்தில் 5 சதவீதம் வரையில் சரிந்து 29700 டாலராகச் சரிந்தது.

டெரா காயின்

மேலும் அதிகம் நம்பப்பட்ட டெரா கடந்த ஒரு மாதத்தில் 5 இல் ஒரு பங்கு சந்தை முதலீட்டை இழந்துள்ளது, இதுவும் ஒரு ஸ்டேபிள்காயின் என்பது முக்கியமானது. டெராUSD காயின் 30 நாளில் 87.25 சதவீதம் சரிந்துள்ளது,

இன்றைய நிலவரம் பிட்காயின் - 29,964.85 டாலர்

எதிரியம் - 2,035.50 டாலர்

டெதர் - 0.9991 டாலர்

USD காயின் - 0.9999 டாலர்

பினான்ஸ் - 298.50 டாலர்

ரிப்பிள் - 0.4199 டாலர்

கார்டானோ - 0.5680 டாலர்

சோலானோ - 54.35 டாலர்

பினான்ஸ் USD - 1.00000 டாலர்

டோஜ் காயின் - 0.09 டாலர்

போல்காடாட் - 10.96 டாலர்

அவலான்சி - 32.96 டாலர்

வார்ப்டு பிட்காயின் - 29,950.63 டாலர்

ட்ரான் - 0.0689 டாலர்

ஷிபா இனு - 0.000012 டாலர்

டாய் - 1.00000 டாலர்

பாலிகான் - 0.68 டாலர்

க்ரானோஸ் - 0.19 டாலர்

UNUS - 4.99 டாலர்

லைட்காயின் - 67.17 டாலர்

பாதிக்கும் மேலாக சரிவு

ஏனெனில் பிட்காயின் மதிப்பானது அதன் ஆல் டைம் உச்சத்தில் இருந்து பாதிக்கும் மேலான சரிவினைக் கண்டுள்ளது. இதன் ஆல் டைம் உச்சமான 69000 டாலர்களுடன் ஒப்பிடும்போது, இன்று காலை நிலவரப்படி 29,763.13 டாலர்கள் வரையில் சென்றும் தற்போது 31,631.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நடப்பு ஆண்டில் பிட்காயினும் இதுவரையில் 32.27 சதவீதம் சரிவினையே கண்டுள்ளது.

 

எத்தேரியம் இதே மற்றொரு முக்கிய கரன்சியான எத்தேரியமும் காலையில் 7 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து, 2317 டாலர்களாக வர்த்தகமாகியது. எனினும் தற்போது 2.17 சதவீதம் சரிந்து, 2399.58 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று அதிகபட்சமாக 2466.6 டாலர்கள் வரையில் சென்ற எத்தேரியம், குறைந்தபட்சமாக 2200.2 டாலர்கள் வரையிலும் தொட்டுள்ளது. இதன் ஆல்டைம் லோ 1701.10 டாலர்களாகும். நடப்பு ஆண்டில் இதுவரையில் 36.07 சதவீதம் சரிவினையே கண்டுள்ளது.

நிபுணர்களின் கருத்து என்ன? முதலீட்டாளர்களிடையே உள்ள மிகுந்த அச்சத்திற்கு மத்தியில், கிரிப்டோகரன்சிகளில் உள்ள தங்களது மொத்த கையிருப்புகளை விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருவதாகவும் தெரிகிறது. இது சந்தையில் பெரும் சரிவினைக் தூண்டுகின்றது. இதன் காரணமாகத் தான் இன்று காலையில் பிட்காயின் மதிப்பானது ஜூலை 2021க்கு பிறகு 30,000 டாலர்களுக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

புதிய முதலீட்டாளர்கள் தயக்கம்

முதலீட்டாளர்கள் இனியும் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படாமல் இருக்க சந்தையில், தங்களது ஆர்டர்களை குறைத்து வருகின்றனர். இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் ரிஸ்க் எடுக்கவும் தயாராக இல்லை. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பதற்றம்

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், செல்லிங் அழுத்தம் அதிகம் காணப்படுகின்றது. பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் ரெசசன் அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. இதுவும் கிரிப்டோகரன்சிகள் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

என்ன தான் கிரிப்ரோகரன்சி குறித்து அதிகப்படியான வெறுப்பு கருத்து பதிவிட்டு, கட்டுப்பாடுகளை விதித்தாலும்.. இளம் முதலீட்டாளர்கள், தொழில்நுட்பம் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்து பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோகரன்சி மீது அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

இப்படிக் கிரிப்டோகரன்சி மீது தீரா காதல் கொண்டவர்களைக் குஷிப்படுத்தும் வகையில் டெலிகாரம் செயலி தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்காகக் கிரிப்டோகரன்சி வாயிலாக இயங்கும் புதிய பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பல தடைகளுக்குப் பின்பு ரீடைல் பணப் பரிமாற்றங்கள் சேவை துறையில் டெலிகிராம் மிகவும் முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரையில் எந்த ஒரு தனி நிறுவனமும் ரீடைல் பேமெண்ட்-ஐ கிரிப்டோகரன்சியில் அறிமுகம் செய்தது இல்லை.

பல
கோடி இளம் முதலீட்டாளர்களைக் குறுகிய காலகட்டத்திற்குள் பெரிய அளவில் ஈர்க்க கிரிப்டோகரன்சி
கடந்த ஒரு வாரமாக அதிகளவில் சரிந்து வந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில்
கணிசமாக உயர்ந்தது.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author
Recent Articles
Sep 18, 2026, 7:18 AM Kayla
Sep 18, 2026, 2:59 AM Leticia
Sep 18, 2026, 12:48 AM Patrick
Sep 18, 2026, 12:15 AM Taixiu mex com