why

உயிரினங்களிடம் உள்ள சில வியப்பூட்டும் உண்மைகள்…

 

உங்களுக்கு

தெரியுமா ?

 

- பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக்

கூட்டின் எடையை விட அதிகம்.

 

– சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.

 

– ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல

இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே

நான்குதான்.

 

– மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம்

சிங்கம்.

 

– பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே

உள்ளது.

 

-ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.

 

-கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள்

உண்டு.

 

– மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற

மிருகங்கள் உண்ணாது.

 

– முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.

 

– இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில்

உள்ளது.

 

– கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில்

மூளை என்ற பகுதி கிடையாது.

 

– நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே

காட்சியைத்தான் காண முடியும். ஆனால்

ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு

வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.

 

– வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.

 

– நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.

 

– உலகில் எல்லாப் பிராணிகளும் முன்

பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே

பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

 

– உலகில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வகை

பட்டாம்பூச்சிகள் உள்ளன.

 

– பெண் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்ட உடனே

இறந்துவிடும்.

 

– உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக

வகைகளைக் கொண்டது மீன்கள்தான்.

 

– நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்து

விடும். இதனால் தாய் நண்டு என்ற ஒன்று

இருக்காது.

 

– உலகில் வாழும் விலங்குகளிலேயே

மிகப்பெரியது நீலத்திமிங்கலம். இதன்

உடம்பிலிருந்து 120 பேரல்கள் வரை எண்ணெய்

எடுக்கிறார்கள்.

 

– சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன்

காணப்பட்டது.

 

– அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக்

கண்டறியப்பட்டிருப்பது இந்திய காண்டாமிருகம்.

விலங்குகள் (Animals), அனிமாலியா (Animalia) அல்லது மெற்றாசோவா (Metazoaஇராச்சியத்தின் பெரும்பாலும் பல உயிரணுக்களாலானமெய்க்கருவுயிரி உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். சில விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமானவை கரிமச் சேர்மங்களை உட்கொள்பவையாகவும்ஆக்சிசனை சுவாசிப்பவையாகவும்தன்னிச்சையாக நகரக்கூடியவையாகவும் (en:Motility), பாலியல் இனப்பெருக்கம் செய்பவையாகவும், முளைய விருத்தியின்போது வெற்றுக்கோள உயிரணுக்களான கருக்கோளத்திலிருந்து (en:Blastula) வளர்ச்சியடையும் உயிரினமாகவும் இருக்கின்றன.

7 மில்லியனுக்கும் அதிகமான விலங்கு இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருப்பினும், கிட்டத்தட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான உயிருள்ள விலங்கு இனங்களே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 1 மில்லியன் பூச்சி இனங்களாகும். விலங்குகளின் நீளம் 8.5 மைக்ரோமீட்டர் (0.00033 அங்குலம்) முதல் 33.6 மீட்டர் (110 அடி) வரை இருக்கும். இவ்வாறு வேறுபட்ட இனங்கள் தமக்கிடையிலும், மற்றும் அவற்றின் சூழல்களுக்கிடையிலும் சிக்கலான தொடர்புகளைக் கொண்டுள்ளன. சிக்கலான உணவு வலை (en:Food web) அமைப்பையும் கொண்டுள்ளன.

அனிமாலியா என்ற இராச்சியம் மனிதர்களையும் உள்ளடக்கியது ஆயினும் பேச்சுவழக்குப் பயன்பாட்டில் விலங்கு என்ற சொல் பெரும்பாலும் மனிதரல்லாத விலங்குகளை மட்டுமே குறிக்கிறது. விலங்குகளின் அறிவியல் ஆய்வு விலங்கியல் என்று அழைக்கப்படுகிறது.

பெரும்பாலான உயிருள்ள விலங்கினங்கள் இருபக்கச்சமச்சீர் உடலமைப்பைக் கொண்டன.

இவற்றுள் உருளைப்புழுக்கள்கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகள் போன்ற முதுகெலும்பிலி குழுக்களை உள்ளடக்கிய புரோட்டோஸ்டோம்கள் காணப்படுகின்றன.

அத்துடன் முதுகெலும்பிகளைக் கொண்ட முதுகுநாணிகள், மற்றும் முட்தோலிகள், ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய டியூட்டெரோஸ்டோம்களும் அடங்குகின்றன.

ப்ரீகாம்ப்ரியனின் எடியாக்கரன் உயிரியல் தரவுகளில் ஆரம்பகால விலங்குகள் பற்றிய தரவுகள் விளக்கப்பட்டுள்ளன. சுமார் 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கேம்ப்ரியன் வெடிப்பின் போது, பல நவீன விலங்குத் தொகுதிகள் தொல்லுயிர் எச்சங்களாகக் கிடைத்தபோது, கடல் உயிரினங்களாக தெளிவாக நிறுவப்பட்டன. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான 6,331 மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; இவை 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம்.

பெயர்வரலாறு[தொகு]

"அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை அனிமலே என்கிற இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இது அனிமா என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக்[மேற்கோள் தேவை] குறிக்கிறது. விலங்கு ராச்சியம் (Kingdom Animalia) என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதனையும் உள்ளடக்கியதாகவே இருக்கின்றது..

பிற உயிரினங்களில் இருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் பல உயிரணுக்களாலான மெய்க்கருவுயிரிகளாக இருக்கின்றன.[3] இப் பண்புகள் இவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஒரு உயிரணு கொண்ட உயிரினங்களில் இருந்து பிரித்துக் காட்டுகின்றது. இவை தன்னூட்ட உயிரிகள் போல் தமக்கான உணவைத் தாமே தயார் செய்ய முடியாதவையாக[4], தமக்கான உணவுத் தேவைக்கு வேறு உயிரிகளில் தங்கியிருக்கும் சார்பூட்ட உயிரிகளாக இருக்கின்றன.[5] இந்தப் பண்பு தாவரங்கள் மற்றும் அல்காக்கள் போன்றவற்றில் இருந்து இவற்றைப் பிரித்தறிய உதவுகின்றன[6] [4] எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் தாமாக நகரும் தன்மை கொண்டனவாக உள்ளன[7] என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைய விருத்தியின்போதுமுளையமானது ஒரு வெற்றுக்கோள வடிவில் விருத்தியடைய ஆரம்பிக்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும்.

உடலமைப்பு[தொகு]

விலங்குகள் தனித்தனி இழையங்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் (Porifera) தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகிய மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான நரம்பு மண்டலம் ஆகியவை இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த சமிபாட்டுத் தொகுதியும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும். இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசோவான்கள் (பல உயிரணு உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அல்லது முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் இமெடாசோவான்கள் (eumetazoans) என்று அழைக்கப்படுகின்றன.

இனப்பெருக்கமும், விருத்தியும்[தொகு]

 
விலங்குகளில் முளையம் (1) பிளஸ்டியூலா எனப்படும் வெற்றுக்கோள வடிவ அமைப்பு (2).

ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பாலியல் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.[8] அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க உயிரணுக்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க ஒடுக்கற்பிரிவு எனப்படும் கலப்பிரிவு நடக்கிறது. அதன்மூலம் உருவாகும் ஒருமடிய நிலையிலுள்ள இவ்விரு பாலணுக்களும் ஒன்றிணைந்து கருவணுக்களை உருவாக்கி, அவை புதிய தனியன்களாய் வளர்ச்சியுறுகின்றன.

கலவியற்ற இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. கன்னிப்பிறப்பு மூலம் இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பெற்றோரின் மரபணுப் படியெடுப்புப் போன்று இருக்கும். அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் (en:fragmentation) முறை, அல்லது அரும்புதல் (en:Budding) முறை மூலமாகவும் இது நடைபெறுகின்றது. [9][10]

ஒரு கருமுட்டையானது கருக்கோளம் (en:Blastula) என்னும் ஒரு உள்ளீடற்ற கோளம் தோன்றுகிறது. இது மறு ஒழுங்கமைவுககும், உயிரணு வேற்றுமைப்பாட்டுக்கும்யும் உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோளங்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறு ஒழுங்கமைவுக்குள் செல்கிறது. ஒரு குறிப்பிட்ட உயிரணுக் கூட்டம் ஒரே மாதிரியான வேற்றுமைப்பாட்டுக்கு உட்படும்போது இழையமாக விருத்தி அடையும். பின்னர் வெவ்வேறு இழையங்கள் கூட்டாக இணைந்து ஒரு தொழிலைச் செய்யும் உறுப்பாக விருத்தியடையும்.

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author