why தலைவலி எதனால் வருகிறது தெரியுமா?

40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்" என்று சொல்லப்படும். ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.

 

தலைவலிக்கான காரணங்கள்;

 

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே.

 

தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், தலைவலி வராது, பெரும்பாலும்,

 

மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது. தலைவலி அதிகமாக இருக்கும்.

 

அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.

 

கணினி, மொபைல் எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச்

 

என

 

செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து. பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி. கண்களில் ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. அரை மணிநேரத்துக்கு ஒரு

 

முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு

 

கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும், சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் தலைபாரம் ஏற்படும். நேராக நின்றால் தலை வலிக்காது. ஆனால், குனிந்தால் தலைவலி ஏற்படும். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும் யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பவன் தரும்.

 

தலைவலிக்கான நீர்வுகள்:

 

மூன்று நாட்களுக்கு மேல் தலைவலி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மைக்ரேன் தலைவலி ஏற்பட குறிப்பிட்டு எந்தக் காரணங்களையும் சொல்ல முடியாது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, மூளையில் இருக்கும் வேதியியல் ரசாயனங்கள் சரியான விகிதத்தில் சுரக்கவில்லை என்றாலோ, மைக்ரேன் தலைவலி வரும்,

 

சிறு வயதில் இருந்தே சரிவிகித உணவை உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். தினமும்

 

உடற்பயிற்சி செய்வதையும், எட்டு மணி நேர முறையான தூக்கத்தையும் கடைப்பிடித்தால்.

 

தலைவலி வராமல் தடுக்க முடியும்.

 

தலைவலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். மைக்ரேன் வராமல் தடுக்கக்கூடிய மருந்துகளை, மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

அதிமதுர சூரணம் - தலைவலி, ஒற்றை தலைவலி, தீராத தலைவலி தீர

 

தேவையான பொருட்கள்:

 

அதிமதுரம் பொடி -35 கிராம் சோம்பு பொடி - 35 கிராம் சர்க்கரை - 35 கிராம் கொடிவேலி வேர்ப்பட்டை பொடி - 17 கிராம்

 

செய்முறை: அதிமதுரம், சோம்பு. சர்க்கரை. கொடிவேலி வேர்ப்பட்டை இவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

 

உட்கொள்ளும் முறை:

 

இந்த பொடியை 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து தேன், நெய் அல்லது பால் இவற்றில் ஏதோ ஒன்றில் கலந்து உட்கொண்டால் தலைவலி, ஒற்றை தலைவலி, தீராத தலைவலி தீரும் -

 

சில மூலிகைகள் வலி நிவாரணத்துக்கு பயன்படுகிறது. இஞ்சி ஒற்றை தலைவலியை சரிசெய்ய உதவுகிறது. மேலும் காய்ச்சல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. புதினா எண்ணெயை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்து கொண்டால் தலைவலிக்கு அது ஒரு சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொதுவாக ஏற்படும் வலி மற்றும் இறுக்கமான தசைகளை சரி செய்ய உதவுகிறது.

 

உங்களுக்கு நீண்ட காலமாக தலைவலி பிரச்சினை இருந்தால் நீங்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். யோகா பயிற்சி செய்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி மற்றும் அதனால் ஏற்படும் அதிர்வெண் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும். மேலும் வலி நிவாரண மருந்துகளை பயன்படுத்த வேண்டி வராது என்றும் ஆய்வுகள் கூறுகிறது. முக்கியமாக தலைவலி ஏற்படுவதற்கு காரணமான மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் யோகா பயன்படுகிறது.

 

வலி ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் போதுமான தூக்கம் இல்லாதது ஆகும். சுத்தமாக தூங்காமல் இருப்பதல் அல்லது மோசமான தூக்கம் பழக்கம் போன்றவற்றால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். எனவே நமது உடலுக்கு போதுமான அளவு தூக்கத்தை தருவது அவசியம். உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் உங்கள் மருத்துவரை 

உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது என்றால் சீஸ், சாக்லெட், ஆட்டுக்கறி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள். இதற்கு பதிலாக விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் பி 12,புரதம், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

ஃபாஸ்ட் புட் மற்றும் அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும்.

தலைவலி உடனடியாக குறைய ஒரு கப் அளவு தண்ணீரில் இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.ஆறியதும் வடிக்கட்டி இந்த கலவையை குடிக்கலாம். இனிப்புச் சுவை வேண்டுமென்று நினைப்பவர்கள் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்லுங்கள்.

தலைவலியை குணமாக்க மிக எளிதான வீட்டு மருத்துவம் இது. ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவிற்கு வைத்திருக்க வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் பதினைந்து நிமிடங்கள் இதனைச் செய்தால் போதும். சைனஸ் பிரச்சனையால் தலை வலி ஏற்ப்பட்டிருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக தலைவலி இருந்தாலோ இப்படிச் செய்வதானல் குணமாகும்.

 

இதனை தொடர்ந்து மூன்று வாரங்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

கண்ணுக்கும் தலைவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கண்ணுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது தலைவலி வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கண்ணின் பார்வை குறைவு படும்போது கண் மருத்துவரை அணுகி கண்ணாடி போட்டுக் கொள்வது முக்கியமானது.

 

கண்ணுக்கு அதிக வேலை கொடுக்கும் பணியெனில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கண்ணுக்கு ஓய்வு கொடுங்கள். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அதை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

 

சுக்கு :

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author

Student