எது top 7 உலகின் மிக பெரிய நாடு
உலகின் நாடுகள் மொழியின் அடிப்படையில், செல்வத்தின் அடிப்படையில், கலாச்சாரத்தின் அடிப்படையில் வேறுபட்டவை - அவை அளவு அடிப்படையில் மிகவும் வேறுபட்டவை.இருப்பினும் இவ்வுலகில் உள்ள முதல் ஏழு பெரிய நாடுகளை பற்றி பார்ப்போம்.
1.ரஷ்யா
உருசியா (Russia) அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும்.இந்நாட்டின் முறைப்படியான பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.
ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள்.
உருசியம் நாடு முழுவதும் அதிகாரபூர்வ மொழியாகவும்; 27 வேறு மொழிகள் பல்வேறு பிராந்தியங்களில் இணை அதிகாரபூர்வ மொழியாகவும் உள்ளன.
2.கனடா
கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டும் ஆட்சி மொழிகளாகும். பிரெஞ்சு மக்களின் மொழிப் போரின் பின்னரே ஜூலை 7, 1969 அலுவல் மொழிச் சட்டம் ஊடாகக் கனடா முழுவதும் ஆட்சி மொழியானது. இதன் பின்னரே கனடா இருமொழி நாடாக அறியப்படலாயிற்று.
கனடாவின் 80% மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் ஆவார்கள். எனினும் இவர்களுக்குள் பல இனங்கள் உண்டு.ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாகப் பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை.
3.அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா, (United States of America / USA / US) பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும்.
ஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும். ஐக்கிய மட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழி ஒன்றும் இல்லை என்றாலும், அமெரிக்க இயல்புபடுத்தும் அவசியப்பாட்டு சட்டங்கள் போன்ற சில சட்டங்கள் ஆங்கிலத்தை தரப்படுத்துகின்றன.
அமெரிக்கா ஒரு பல கலாச்சார தேசம், பரந்த வகையான இனக் குழுக்கள், மரபுகள், மற்றும் மதிப்பீடுகளின் தாயகமாக உள்ளது.
4.சீனா
சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும்.
1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர். பௌத்தம், டாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர்.
5.பிரேசில்
தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.
பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு. பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன.
6.ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு.
பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் 2.32 கோடி.
ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும்.பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர்.
7.இந்தியா
இந்தியா அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.
இந்திய அரசியல் அமைப்போ, இந்திய சட்டங்களோ, தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை. செம்மொழித் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியைத் தொடர்ந்து சமசுகிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
You must be logged in to post a comment.