மரத்தின் பெயர் : அனாகேச்சோ ஆர்கிட் மரம்
தாவரவியல் பெயர் : பாஹினியா லூனாரியாய்டஸ்
ஆங்கில பெயர் : Anacacho Orchid Tree, Texasplume, White Orchid Tree
தாயகம் : அமெரிக்கா
மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்
தாவர குடும்பம் : பேபேசி
மற்ற பெயர்கள் : டெக்கஸ் புளும், அனாகேச்சோ ஆர்கிட் ட்ரீ, சிகுவாகுவான் ஆர்கிட் ஷ்ரப், ஆத்தி மரம், மத்தாரை, இறுவாட்சி
பொதுப்பண்புகள் :
🌲 அனாகேச்சோ ஆர்கிட் மரம் 8 முதல் 12 அடி உயரம் வரை வளரும். 6 முதல் 10 அடி அகலத்திற்கு பறந்து வளரும்.
🌲 இதன் பூக்கள் பார்க்க ஆர்கிட் பூக்கள்போல இருக்கும். இவை துளிர்விடும் பருவத்தில் பூக்கத் தொடங்கி கோடைப் பருவம் வரைத் தொடரும். பூக்கள் வெள்ளை அல்லது ஊதா நிறத்தில் பூக்கும்.
🌲 இந்த மரங்களை நடுவதற்கு நல்ல வடிகால் வசதி வேண்டும். முழுமையான சூரிய வெளிச்சம் வேண்டும் அல்லது லேசான நிழல் இருந்தாலும் தாங்கி வளரும்.
🌲 முக்கியமாக வறட்சியைத் தாங்கும். அதிக நீர்ப்பாசனம் தேவைப்படாது. பரவலான மண் வகைகளில் வளரும்.
🌲 பாறைகள் நிறைந்த மண், சுக்காம்பாறை நிறைந்த மண், மணற்சாரி மண், நடுத்தரமான இருமண்பாடு மண் ஆகியவற்றிலும் நன்கு வளரும்.
பயன்கள் :
🌲 அனாகேச்சோ ஆர்கிட் மரம் வீடுகளிலும், பொது இடங்களிலும் அழகுக்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.
🌲 தேனீக்களுக்கும், பட்டாம்பூச்சிகளுக்கும் பிடித்தமான மரம். அதாவது இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி வாழ்ந்து அதன் மூலம் தேனை கொடுக்கிறது.
மரம் தான் மழைக்கு ஆதாரம்..
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும். மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 மீ. (300 அடி), உயரம் வரை வளரக்கூடியவை, சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டன. இதே போல தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட "பவோபாப் மரம்" இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது.
இந்த மரம் தமிழர்கள் ஆதிகாலத்தில் கடல் வணிகத்தில் உலகின் முன்னோடிகளாக இருந்தனர் என்பதற்கு நல்ல உதாரணமாக கூறலாம்.
காரணம் தமிழர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் செய்ய போகும்போது இந்த மரத்தின் விதைகளை அங்கிருந்து எடுத்து வந்து இங்கு விதைத்து இருகின்றனர்.
வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதிகளாகும். மரத் தண்டு, தாங்குவதற்கானதும், நீர், உணவு முதலியவற்றைக் கடத்துவதற்குமான மென்சவ்வுகளைக் (காழ் (xylem) மற்றும் உரியம் (phloem)) கொண்டது. மரம் (மூலப்பொருள்), காழ்க் கலங்களைக் கொண்டது, மரப்பட்டை முக்கியமாக உரியங்களால் ஆனது. மரம் வளரும்போது இது ஆண்டு வளையங்களை உருவாக்குகின்றது. மிதவெப்ப மண்டலக் (temperate) காலநிலைப் பிரதேசங்களில் இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக் கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் பெரும்பாலும் நிலத்திற்கடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள உதவுவதுடன், மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குப் பொருட்களை உறிஞ்சவும் பயன்படுகின்றன. தாவரங்கள் உணவைத் தயாரிப்பதற்குச் சூரிய ஒளி தேவை. இலைகளின் மூலமே இச் செயற்பாடு நடைபெறுகின்றது. மரங்கள் அடர்த்தியாகவுள்ள இடங்களில் ஒளிக்காக மற்றத் தாவரங்களுடன், போட்டியிடவேண்டியுள்ளது. இதற்கு உதவும்பொருட்டுத், தண்டுகள், இலைகளைக் கொண்டுள்ள கிளைகளை உயரத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பல தாவரங்களில், இலைகள் கூடிய அளவு சூரிய ஒளியைப் பெறத்தக்கவகையில், கிளைகளின் ஒழுங்கு அமைந்திருக்கும்.
எல்லா மரங்களும் முன் கூறிய பாகங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாகப் பன்னங்கள் கிளைகளைக் கொண்டிருப்பதில்லை. வட அமெரிக்காவில் வளரும் சாகுவாரோ கக்டஸ்களுக்குச் செயற்பாடுள்ள இலைகள் இல்லை. மரப் பன்னங்கள் பட்டைகளைக் கொண்டிருப்பதில்லை. அவற்றின் பருமட்டான வடிவத்தையும், அளவையும், அடிப்படையாக வைத்து இவையனைத்தும் மரங்களாகவே கொள்ளப்படுகின்றன. சில சமயம் அளவே முக்கியமாகக் கருதப்படுகின்றது. பல கிளைகள் அல்லது தண்டுகளுடன் கூடிய, மரத்தைப் போலவே வடிவமுடைய தாவரமொன்று, அளவில் மிகவும் சிறிதாக இருக்கக்கூடும். இது செடியென்று அழைக்கப்படுகின்றது. எனினும் மரத்துக்கும், செடிக்கும் இடையில் சரியான வேறுபடுத்தும் எல்லை கிடையாது. சிறியனவாக இருப்பதால் "பொன்சாய்"கள் மரங்கள் என்று கொள்ளப்படமுடியாது, எனினும் மரவகைகளின் வடிவத்தைக் கருதும்போது, தனியொரு specimen இன் வடிவத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மூங்கில்கள் மரங்களின் பல இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவை மரங்களென அழைக்கப்படுவதில்லை.
ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு எனப்படுகின்றன, பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும்போது அது காடு எனப்படுகின்றது. பெரிய ஆனால் ஐதாக இருக்கும் மரங்களையும் இடையில் புல்வெளிகளையும் (வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட) கொண்ட பகுதி வெப்பப் புல்வெளி (savanna) எனப்படுகின்றது. மேலும்..
முக்கிய மரவகைகள் (genera)[தொகு]
மரங்கள் பல்வேறுபட்ட தாவரக் குடும்பங்களுள் அடங்குகின்றன. அதனால், இவை பல்வேறுவகையான இலை வகைகள், வடிவங்கள், பட்டைகள், பூக்கள், பழங்கள், முதலியவற்றைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்பகால மரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும். பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் (gymnosperm) போன்றவை தோன்றின. இன்று பெரும்பாலான மரங்கள் பூக்கும் தாவரங்களும், ஊசியிலைத் தாவரங்களுமாகும். கிழேயுள்ள பட்டியல் பெரிதும் அறியப்பட்ட மரங்களின் பெயர்களையும், அவை பொதுவாக எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகின்றது.
You must be logged in to post a comment.