WHEN ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள்?

     பல நூற்றாண்டுகளாக தமிழக மண்ணில் வழிபாட்டு முறைகள் ஆழமாக பதிந்துள்ளதை, நகர்ப்புற சாலைகளில் உள்ள கோவில்கள் மூலமாக நாம் உணர முடியும். அவை, வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல், பலரது வாழ்வில் அவற்றின் வழிபாடுகள் ஒரு அங்கமாகவும் மாறி இருக்கின்றன.
கிராம தேவதை வழிபாடு என்பதை ஆதிசங்கரர்தான் முதலில் தொடங்கி வைத்ததாக சொல்லலாம். அதாவது, தென்னகத்தில் சிருங்கேரி பீடத்தை ஸ்தாபனம் செய்த அவர், சிருங்கேரி கிராமத்துக்கு காவல் தேவதைகளாக கால பைரவர், அனுமன், காளிகாம்பாள் ஆகிய தேவதைகளை பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கான வழிபாட்டு நியமங்களையும் அமைத்துக்கொடுத்தார்.
வால்மீகி ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில், இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை இலங்கையின் காவல் தேவதையான லங்காலட்சுமி தடுத்து நிறுத்துகிறாள். அனுமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறாள். ஆனாலும் அவளுடன் சண்டையிட்டு வென்ற பின்னரே, அனுமனால் இலங்கைக்குள் நுழைய முடிந்தது. இந்தக் கதை நமது இந்திய கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள எல்லை காவல் தேவதை பற்றிய அடிப்படை தகவலை அளிக்கிறது.
அதாவது, ஒரு கிராமத்திற்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கையான மற்றும் செயற்கையான பாதிப்புகள் நுழையாதபடிக்கு, எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்தி அம்சங்களாக கிராம தேவதைகள் திகழ் கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வழிபாடுகள் மற்றும் பலி பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இன்றைய நிலையிலும் ஊருக்கு மத்தியில் உள்ள கோவில் திருவிழா சமயத்தில், அப் பகுதியில் உள்ள கிராம தேவதைக்கு என்று தனிப்பட்ட பலி பூஜைகள் செய்யப்பட்டு, அவற்றின் உத்தரவு கேட்டு பின்னர் ஊரில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
கிராம தேவதைகளில் வீரபத்திரர் முக்கியமான இடத்தில் உள்ளார். அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பதன் அடிப்படையில், அவருக்கு ஆகம முறையில் பூஜைகள் செய்யப்பட்டன. கிராம தேவதையான முனீஸ்வரர், சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டவர் என்றும், அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்ததாகவும் ஐதீகம்.
தமிழகத்தில் பரவலாக இருக்கும் கிராம தேவதை வழிபாட்டில் மாரியம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அன்னை பாம்புப் புற்றில் இருந்து வெளியானவள். மழையைப் பொழிய வைப்பவள், நோய்களை தீர்ப்பவள் என்ற ரீதியில் தொடக்க காலங்களில் மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த அன்னை பார்வதியின் அவதாரமாக ஏற்கப்பட்டு, ஆகம முறையிலான பூஜைகள் செய்யப்பட்டன. சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டை ஸ்ரீஆதி மொட்டையம்மன் கோவில், முன்னர் கிராம ஆலயமாக இருந்தது. அதேபோல் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், கோல விழி அம்மன், தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில் ஆகிய அனைத்தும், முன்காலத்தில் கிராம தேவதை களாக இருந்து, பிரதான ஆலயங் களாக வளர்ச்சி அடைந்தவை.
 
இன்று பிரசித்தி பெற்ற கோவில்களாக திகழும் பலவும், கிராம ஆலயங்களாக இருந்து, காலப்போக்கில் பூஜைகள் விரிவாக செய்யப்பட்டு பிரதான ஆலயங்களாக மாறி இருக்கின்றன.
பேச முடியாதவரை பேச வைக்க அருள் புரியும் தெய்வம் என்று, கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன், சரஸ்வதியின் அவதாரம் என்பதும், பக்தர்களின் மன விருப்பத்துக்கு இசைந்து அருள் தருபவளான இசக்கி அம்மன், பார்வதியின் அவதாரம் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்திய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில், எல்லை தேவதைகள் அமைத்து வழிபடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு, அவை வெவ்வேறு சக்தி நிலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இன்றும் உள்ளன. அந்த சக்திகளின் மீதான நம்பிக்கை அடிப்படையில் தான், மக்கள் நிம்மதியாக அன்றாட பணிகளை கவனித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும் நம்மை வழியனுப்பவும்.
அந்த மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தல் வாழவைப்பதுமாக இருக்கும் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன

கிராம தேவதைகள் அல்லது ‘ஊரம்மா’ என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களாக இருப்பவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் புலனாகிறது.

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

பெண்களில் மாரியம்மாவும் ஆண்களில் அய்யனாரும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார்கள். இவர்கள் தவிர மதுரைவீரன், மலட்டம்மா, முத்தாலம்மா… என்று எத்தனையோ தெய்வங்களின் உயிரான கதைகள் நமக்கு ஆர்வமூட்டுகின்றன.

வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி மகுடம் கொண்டிருத்தல், நெற்றியில் போட்டு அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வங்களின் தனி அடையாளங்கள்.

மாரியம்மன் தொடங்கி, வெயிலுகந்தாள் கருக்கினிலமர்ந்தாள், வால் மேல் நடந்தாள் என்று பல தெய்வங்களின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவை வெறுமனே கதையாடல்கள், பக்தி ரசம் சொட்டும் பனுவல்களாக மட்டும் இல்லாமல், அதன்மூலம் தமிழ்ச்சமூக அமைப்பை, அதன் பழக்கவழக்கங்களை, தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

குடும்ப தெய்வங்கள்.
குல தெய்வங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம்; ஆனால், ‘கும்பிடாத சாமி’ கள் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரத்தில் இத்தகைய சாமிகள் உள்ளன; காட்டுக்குப் போகும்பொழுது இடி விழுந்து செத்தவர்களுக்கு, அவர்கள் செத்த இடத்திலேயே கல்லை நட்டு வைத்து ‘சாமி’ என்று வைத்துவிடும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால், அவற்றை யாரும் கும்பிடுவது கிடையாது. கேட்டால், அதைக் ‘கும்பிடாத சாமி’ என்கிறார்கள். மக்களின் நம்பிக்கைகளில்தான் எத்தனை வகை!

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும்
கிராம தெய்வங்களை
ஈ.வே.ரா கூட எதிர்க்கவில்லை.
மாறாக,
 அதிகாரமையமாகிய கோயில்களையும் அதை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே
அவர் எதிர்த்தார் என்பார்கள்.
ஆனால் அவரை பின்தொடர்ந்தவர்கள் அனைத்தையும் கடவுள் என்று கூறி இந்த வழிபாட்டையும் எதிர்க்கின்றனர் என்பதும் வரலாற்று உண்மை,  இது தான் அவர்களின் பகுத்தறிவு போல

சில இயக்கங்களிலும், கட்சிகளும் பெரிய தலைவர்கள் மட்டுமே இனங்காணப்பட்டு, அடிநாதமான தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதுபோல் 
எப்படி எதுக்கு எடுத்தாலும்

பெரியார் பூமி, பூமி என்று சொல்லி ஒரு குறிப்பிட்டவர்களை மட்டும் போற்றியும் மற்றவர்களை மறைத்தும் நம் நினைவுகளில் இல்லாமல் திராவிட இயக்கங்களும்  கட்சிகளும் செய்வதை போல

பெரிய தெய்வங்கள் மட்டுமே பூஜிக்கப்பட்டு சிறுதெய்வங்கள் புறக்கணிக்கப்படும் சூழல் தமிழ்ச்சமூகத்தில் உருவாக்கினர்

சுருங்கச் சொல்லின், இந்த கிராம தெய்வங்கள் பக்திக்குரிய உருவங்களாக மட்டுமின்றி, கிராம சமூகத்தின் பெரும் சக்தியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.

இன்றைய உலகமயமாக்கலின் பின்னணியில், நம் தமிழ் சமூகம் தமது வேர்களை மெல்ல  இழந்து வருவதையும் உணர முடிகிறது.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author