சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாடானையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, முதுகுளத்தூர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம், தலைஞாயிறு பகுதிகளில் தலா 6 செமீ மழையும், சோழவந்தான், சாத்தூர், மதுக்கூர், விருதாச்சலம், கோவிலங்குளம், திருத்துறைப்பூண்டி, மகாபலிபுரம், பட்டுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது
14 மாவட்டங்களில் கனமழை
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
இடி மின்னலுடன் கனமழை
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22 மாவட்டங்களில் கனமழை
27ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானம் மேகமூட்டம்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான முன்னறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மூன்று நாட்களுக்கு கனமழை
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை
25 மற்றும் 26ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான முன்னறிவிப்பு
இன்றைய தினம் குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சூறாவளிக்காற்று வீசும்
24ஆம் தேதியன்று இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25ஆம் தேதியன்று குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26ஆம் தேதியன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தலைநகர் சென்னை
இதனிடையே தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. வடசென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஆர்கே நகர், ராயபுரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல காசிமேடு என நகரின் வடக்கு பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
கனமழை
மேலும் கே.கே.நகரில், அசோக் நகர், கீழ்பாக்கம், மீனம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட நகரின் பல முக்கிய இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி முகப்பேர், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதர பகுதிகள்
தலைநகர் சென்னை மட்டுமின்றி தஞ்சையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நெல் பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், இந்த மழை விவசாயிகளுக்குச் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, திருவண்ணாமலை, ஆரணி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பல 100 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி இருந்தது.
You must be logged in to post a comment.