நம் நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை உருவாக்கவும், வலுப்படுத்தவும் தேவைப்படும் அனைத்து வகையான அரசு சார்ந்த முன்னோடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஏஜென்சியாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை பணியாற்றுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்துவதும் அந்தந்த துறைகளில் பணி சிறக்கத் தேவைப்படும் மனிதவள மற்றும் நிறுவன மூலவளங்களை விரைவாக வளர்த் தெடுப்பதும்தான் குறிப்பிட்ட கட்டாய பணி ஆணைகளாகும். அதற்கேற்பவே அறிவியல் தொழில்நுட்பத்துறை (D.S.T.) கொள்கைகளை உருவாக்குகின்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமுதாயப் பலன்களை வழங்கக்கூடிய திட்டங்களை நடை முறைப்படுத்துகின்றது. இவை மேலே கூறிய முக்கியமான பணி ஆணைகளுக்கு ஏற்பச் செயல்படுவதாக உள்ளது. வளர்ச்சி மாதிரிகள், பங்குதாரர்களின் பங்கேற்பு திட்டங்களுக்குள் உள்முகமான இணைப்பு, நமது நாட்டுக்குள் உள்ள பலவகையான துறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு, அதிலும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் உருமாறல் மாற்றங்கள் சாத்தியப்படுத்தப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடி நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் செயல் பணித்திட்டங்கள் உத்வேகம் அளிப்பவையாக இருந்தன. இந்தியாவில் தயாரியுங்கள், ஸ்டார்ட்அப் இந்தியா, தூய்மை இந்தியா, ஆரோக்கிய இந்தியா மற்றும் டிஜிட்டில் இந்தியா போன்ற திட்டங்கள் குறிப்பாக இவற்றில் அடங்கும்.
இலக்குகளை அடைவதற்கான முக்கியமான சில முன்னோடி நடவடிக்கைகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் நமது நாடு முழுவதும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்தி அதிகாரம் அளிப்பதற்காகப் பங்குதாரராகச் சேர்ந்துள்ளது. 70க்கும் அதிகமான அதிவேகச் செயல்பாட்டு கணிப்பொறி அமைப்புகளுடன் ஒரு விரிவான சூப்பர் கம்ப்யூட்டிங் விநியோக அமைப்புச் சட்டகத்தை நிறுவுவதன் மூலம் இதைச் செயல்படுத்த உள்ளது. இந்த இடையீட்டுச் செயல்பாடு தேசிய சூப்பர் கம்யூட்டிங் பணித்திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும். இந்த இயந்திரத்தின் நோக்கமானது இந்தியாவை கம்யூட்டிங் மற்றும் பெரும்தரவு பகுப்பாய்வில் முன்னணி இடத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்வதே ஆகும். இந்தப் பணித்திட்டம் ரூ.4,500 கோடி செலவில் மார்ச் 2015ல் அனுமதிக்கப்பட்டது. இம்ப்பாக்டிவ் ஆய்வு புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் (இம்ப்ரிண்ட்) திட்டத்துடன் சேர்ந்த செயலானது அறிவியல் தொழில் நுட்பத்துறையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஒன்றிணைய வைத்துள்ளது. உடல்நலப் பராமரிப்பு, தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம், எரிசக்தி, நிலைத்த குடியிருப்பு, நானோ தொழில்நுட்பம், நீர் ஆதாரங்கள் மற்றும் நதி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட பொருட்கள், அபாயத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுதல் தொடர்பான பாதிப்பு குறைப்பு, தகவமைப்பு போன்ற மிக முக்கியமான சமூகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த தேவைகளை எதிர்கொள்ள இந்த ஒன்றிணைப்பு உதவும்.
ரெயில்வே அமைச்சகத்துடன் சேர்ந்து கூட்டாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கையானது எரிபொருள் செயல்திறனை மேம்படுத்துதல், மாசு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள், மாற்று எரிபொருட்கள், டீசல் இழுவைகளில் எரிபொருள் சிக்கனம் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.
அறிவாளிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து அவர்களைத் தக்கவைத்தல்
ஆரம்பக்கட்ட பணிவாய்ப்பு ஆராய்ச்சி விருது (இ.சி.ஆர்.ஏ) என்பது தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் முன்னணி பிரிவுகளில் ஆர்வமூட்டும் மற்றும் புத்தாக்க ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு அவர்களது தொடக்கநிலை பணிவாய்ப்பிலேயே ஆதரவை அளிப்பதற்காகவே இந்த விருது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது மூன்று ஆண்டு கால கட்டத்துக்கு ரூ.50லட்சம் ஆய்வு மானியம் கொண்டதாகும். தேசிய முனைவர் பட்டத்துக்குப் பிறகான ஆய்வுத் (என்பி.டி.எஃப்) திட்டம் இளம் விஞ்ஞானிகளை ஈர்த்தல் மற்றும் தக்கவைத்தலை நோக்கமாகக் கொண்டது. கல்வி/ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையங்களில் இருந்து திறமையானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கிறது.
அறிவியலில் பெண்களை ஈடுபடுத்துதல்.
2014ல் தொடங்கப்பட்ட கிரன் (வளர்த் தெடுத்தல் மூலமாக ஆராய்ச்சியை மேம்படுத்துதலில் அறிவின் ஈடுபாடு) என்ற தலைப்பிலான திட்டத்தின் மூலம் அறிவியலில் பெண்களை ஈடுபடுத்தும் இலக்கானது எட்டப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது அறிவியலில் பாலினச் சமத்துவ நிலையை எட்டுவதற்கு உதவுகின்றது. அதாவது பெண் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சி வேலைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. மேலும் இத்திட்டமானது குடும்பப் பொறுப்புகளின் காரணமாக தங்களது வேலைகளை இடையில் விட்டுவிட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றது மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கின்றது. அவர்கள் தொழில்முனைவோர்களாக மாற உதவுகிறது.
கிடைக்கும் சமூகப் பலன்கள்
எரிபொருள் பலன்கள், கழிவில் இருந்து செல்வம், சரியான அளவில் பிரித்தெடுத்தல், உயிர் மூலவளங்களை நிலைத்த முறையில் நிர்வகித்தல் முதலானவை உள்ளிட்ட பிரிவுகள் இதில் அடங்கும். கீழே இதற்கான மூன்று உதாரணங்கள் தரப்படுகின்றன
ஏழைகளின் வீடுகளுக்கு ஒளி தரும் சூரிய ஜோதி.
பகல் நேர சூரிய ஒளியைக் கிரகித்து அதனை இருளான வசிக்கும் வீடுகளுக்குள் திரும்பத் தரும் வகையில் குறைந்த செலவில் சூரியஜோதி என்ற பெயரில் ஒரு கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இது ஒரு மைக்ரோ சோலார் டோம் ஆகும். சூரிய ஒளியைப் கிரகித்துக் கொள்வதற்காக அக்ரிலிக் பொருளால் செய்யப்பட்ட உள்ளே இருப்பது வெளியில் தெரியும் வகையிலான அரைக்கோளக் கலசம் இந்தக் கருவியில் உள்ளது. பகல் நேரத்தில் சூரியஜோதி மூலமான பிரகாசம் 15வாட் எல்இடி விளக்குத் தரும் ஒளிக்குச் சமமான அளவுக்குக்கூட இருக்கும். இந்தக் கலசம் ஒரு ஃபோட்டோ வோல்டெயிக் (பிவி) பேனலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சூரியன் மறைந்த பிறகும் 4 மணி நேரங்கள் வரை ஒளி தருவதற்காக இது இணைக்கப்பட்டுள்ளது.
ஊரகத் தொழில் மயமாவதற்கான உள்நாட்டு தொழில்நுட்பம்
நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, ஊரகப் பகுதிகளில் கிடைக்கும் உள்ளூர் மூலவளங்களைப் பயன்படுத்தி நிலைத்த தொழிற்சாலை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அதற்கேற்ப அறிவியல் தொழில்நுட்பத் துறையானது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக ஊரக மக்களுக்கு உதவ பெருமுயற்சி எடுத்து வருகின்றது
இனவியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு மையம்
5 ஆண்டுகளுக்கு ரூ.8.92 கோடி எனப் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டு ஆதரவுடன் அறிவியல் தொழில்நுட்பத் துறை இனவியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான மையத்தை 2015ல் நிறுவி உள்ளது. விசேஷமான மருத்துவ மற்றும் நறுமணக் குணாம்சங்கள் கொண்ட வடகிழக்கு பிராந்தியங்களில் கிடைக்கக் கூடிய காட்டு மூலிகைகளில் இனவியல் சார்ந்த ஒளிவேதிப் பொருள் ஆராய்ச்சிகளை இந்த மையம் மேற்கொள்ளும். பாரம்பரிய மூலிகைகள் மற்றும் அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துவப் பொருட்களை இந்த மையம் பரிசோதித்து அங்கீகரிக்கும். மேலும் உள்ளூர் சமுதாய மக்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்த உதவும். சிறப்பான வாழ்வாதாரம் மற்றும் பலன்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மூலமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும்.
You must be logged in to post a comment.