TOP TOP TWO PATTI VAITHIYAM(இரண்டு முதன்மையான பாட்டி வைத்தியம்)

1. இரும்பல் மற்றும் சளி உடனே நீக்க:

நம்மில் பெரும்பாலானோருக்கு குளிர்காலம் மற்றும் மழை காலங்களில் சளி மற்றும் இருமல் தொந்தரவு அதிகரித்து இருக்கும். இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மூச்சுக்காற்று மற்றும் கண்ணுக்குத் தெரியாத நீர் திவலைகள் மூலம் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும். இதை தடுப்பதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.

தேன் மற்றும் மிளகு தூள்.

தேன் மற்றும் மிளகுத்தூள் மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு மருத்துவம். இது மிக விரைவில் இருமல் மற்றும் சளி இரண்டையும் போக்கக்கூடியது மேலும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

பயன்படுத்தும் முறை:

மிளகு 5 கிராம் அளவிற்கு எடுத்து அதனை நன்றாக பொடி செய்து தேன் உடன் ஒரு உள்ளங்கையில் ஒரு ரூபாய் நாணயம்அளவிற்கு கலந்து நாக்கில் வைத்து சிறிது வெந்நீருடன் குடித்து வர இரும்பல் மற்றும் சளி இரண்டும் சரியாகிவிடும். இதனை ஒரு நாளிற்கு இரண்டு அல்லது மூன்று வேளை எடுத்துக் கொள்ளலாம். இதனை ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்கள் சாப்பிடும் அளவில் பாதி அளவும் கொஞ்சம் தேன் அதிகமாகவும் கலந்து கொடுக்கலாம்.

காய்ச்சல் சரியாக:

இதேபோல் குளிர்காலம் மற்றும் மழை காலங்களில் பெருகிவரும் நோய்களில் ஒன்று காய்ச்சல். காய்ச்சலும் பொதுவாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவும். எனவே எப்பொழுதும் காய்ச்சல் மற்றும் இருமல் சளி உள்ளவர்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் இடைவெளி விட்டு பேச வேண்டும்.

2.காய்ச்சல் குணமாக பப்பாளி சாறு:

பப்பாளி சாறு ஒரு இயற்கையான எதிர்ப்பு சக்தி மிக்க காய்ச்சலை குணமாக்க கூடிய ஒரு கை வைத்தியமாகும். இது பொதுவாக நம் வீட்டை சுற்றிலும் கிடைக்கும்.

பப்பாளி சாறு தயாரிக்கும் விதம்: 

பொதுவாக பப்பாளி மரத்தில் இருந்து மிகப்பெரிய இலை இல்லாமல் மிகச் சிறிய இலையும் இல்லாமல் நடுத்தரமான இலையை பறித்து அதனை முன்புறமும் பின்புறமும் எந்தவித பூச்சிகள் மற்றும் பிற கோடுகள் இல்லாததை உறுதி செய்து கொள்ளவும். பின்பு இதனை நன்றாக தண்ணீரில் அலசி சிறிது சிறிதாக பறித்து மிக்ஸியில் சிறிது வெதுவெதுப்பான நீரை ஊற்றி அரைத்துக் கொள்ளவும். அதனை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். குறைந்தபட்சம் 20 ml அளவிற்கு எடுத்து அதனை அருந்தலாம். இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதில் antibiotic அதிகம் உள்ளதால் இயற்கையாகவே நம் காய்ச்சலை இரண்டு நாளைக்குள் சரி செய்து விடும். இதை அருந்தும் போது கசப்புத் தன்மை இருக்கும் என்பதால் இதனை அருந்திய உடன் சிறிது தேன் அருந்தலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது நம்மில் பாதி அளவு சாறு கொடுத்தால் போதுமானது. மேலும் இது டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும் உதவும்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author