Top சுவாரஸ்ய கதைகள்

மரண சாஸ்திரத்தை கூறிய ஏழை சிறுமி – குட்டி கதை 

sirumi

சென்னையில் படு சுருருப்போடு மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். சாலை ஒன்றில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ரெட் சிக்னல் விழுந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. அந்த சிக்னலில் இருந்த ஏழை சிறுமி ஒருவள் அங்கு நிறுத்தப்பட்ட ஒரு கார் அருகே சென்றால். மெதுவாக காரின் கதவுகளை தட்டினால். காரில் இருந்த ஒருவர் கார் கதவு கண்ணாடியை இறக்கி விட்டு. என்னமா காசு எதுவும் வேணுமா ? என்று கேட்கிறார். சில நொடிகள் மெளனமாக இருந்த அந்த சிறுமி காரில் உள்ள அனைவரையும் உற்று பார்க்கிறாள். அதில் ஒரு பெற்றோர் தன் குழந்தையோடு பயணித்துக்கொண்டிருப்பதை காண்கிறாள். அதோடு அந்த காரில் ஒருவர் புகை பிடித்துக்கொண்டிருப்பதையும் காண்கிறாள். மீண்டும் அந்த நபர் என்னமா வேண்டும் உனக்கு என்று கேட்கிறார். அந்த சிறுமி எதையோ சில நொடிகள் யோசித்துவிட்டு, எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா ஆனால் உங்கள் குழந்தைக்கு நீங்கள் அனைத்தையும் தரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கிறாள்.   ஏம்மா இப்படி கேக்குற என்று அந்த நபர் கேட்க, நீங்க உங்க குழந்தைக்கு எல்லாத்தையும் கொடுப்பேன்னு சொன்னிங்க ஆனா அது பொய்யோனு தோணுது. நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ இல்லையோ தயவு செய்து வறுமையை மட்டும் கொடுத்துறாதீங்க. அது மிகவும் கொடியது. நீங்கள் உங்கள் குழந்தைக்கு அனைத்தையும் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து இந்த புகை பழக்கத்தை நிறுத்திவிடுங்கள் ஐயா என்று கூறுகிறாள். இன்னைக்கு என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் நான் இவளவு ஏழ்மையில் இருந்திருக்க மாட்டேன் நீங்களும் என்னை பிச்சைக்காரி என்று நினைத்திருக்க மாட்டீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்த அமைதியாய் அவள் நகர்கிறாள். சிகனால் மாறியதால் அங்கிருந்த வாகனங்களும் நகர்ந்தது. ஆனால் அந்த காரில் இப்போது சிகரெட் புகையின் நாற்றம் துளிகூட இல்லை.

இறைவனை காண எது எளிய வழி – ஒரு குட்டி கதை 

sivan-4

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அந்த காட்டில் வழக்கமாக விறகு வெட்டும் இரு ஆசாமிகள் இந்த முனிவர் எப்போதும் தவத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு செல்வர். ஒரு நாள் அவர்கள் இருவரும் விறகு வெட்டிக்கொண்டிருக்கையில் திடீரென ஒருவர் மயங்கி விழுந்துவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொருவர் தவமிருக்கும் முனிவரிடம் சென்று தன்னுடைய நண்பன் திடீரெனெ மயங்கி விழுந்துவிட்டான் அவனை காப்பாற்றுங்கள் என கதறுகிறார். தவத்தில் இருந்து விழித்த முனிவர், என் தவத்தையே கலைகிறாய் என்றால் உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும் என்று கோவத்தோடு எழுந்து அவனை குருவியாக போகும்படி சபிக்கிறார். உடனே அந்த ஆசாமி குருவியாக மாறுகிறார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து வந்த இன்னொருவன் நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அந்த முனிவரிடம் தன் நண்பனை எப்படியாவது மீண்டும் மனிதனாக மாற்றும்படி வேண்டுகிறான். கோப நிலையில் இருந்து சாந்தம் அடைந்த முனிவர், எனக்கு சாபம் கொடுக்க தெரியுமே தவிர அதில் இருந்து விடுவிக்க தெரியாது ஆகையால் இது குறித்து நான் என் குருநாதரிடம் அறிந்து வருகிறேன் அது வரை நீ இந்த குருவியை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். தன் குருநாதரிடம் சென்று நடந்ததை பற்றி விவரிக்கிறார். குருநாதர் சிறிது நேரம் யோசித்துவிட்டு இந்த சாபத்தில் இருந்து அவன் விடுபட வேண்டும் என்றால் உன் தவ வலிமையை நீ தானமாக கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். தவ வெளிமையை கொடுப்பதற்கு அவர் மனம் இணங்கவில்லை ஆகையால் வேறு ஏதும் உபாயம் உள்ளதா என கேட்கிறார். கிருஷ்ணாபுரி என்னும் ஊரில் பகலவன் என்று ஒருவன் உள்ளான். அவனிடம் நிறைய புண்ணியம் இருக்கிறது ஆகையால் அந்தபுனியத்தில் சிறுதளவு நீ தானமாக பெற்றால் அதை கொண்டு சாபத்திற்கு விமோச்சனம் தரலாம் என்று கூறுகிறார். அதோடு நீ தேவை இல்லாமல் சினம் கொண்டு இப்படி யாருக்கும் சாபம் அளிக்கவேண்டாம் அது உன் தவப்பயனை குறையச்செய்யும் என்றும் கூறுகிறார்.   குருதேவர் சொன்ன அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு கிருஷ்ணாபுரியை நோக்கி பயணம் செய்கிறார் அந்த முனிவர். வழியில் ஒரு அழகிய மங்கையை கண்டு அவள் அழகில் மெய்மறந்து போகிறார். இதை கண்ட அந்த மங்கை, முனிவராக இருந்து கொண்டு என் அழகில் சொக்குகிறீர்களே இது நியாமா என்று கேட்கிறார். இதனால் ஆத்திரமுற்ற அந்த முனிவர் அந்த பெண் தன் அழகை இழக்கட்டும் என்று சாபமிடுகிறார். உடனே அந்த பெண் கோரமாக மாறிவிடுகிறார். கிருஷ்ணாபுரியை அடைந்ததும் பகலவனின் வீடு எங்கிருக்கிறது என்று ஒருவரிடம் வினவுகிறார். பகலவனின் வீட்டு சமையல் சுவையாக இருக்கும் என்பதற்காக இப்படி சாப்பாட்டிற்காக அவன் வீட்டை தேடி அலைகிறீர்களே ஒரு முனிவருக்கு இது தான் அழகா இன்று அவன் கேட்கிறான். இதை கேட்டு கோபம் கொண்ட அந்த முனிவர் அவனை ஊமையாய் போகட்டும் என்று சபித்துவிட்டு ஒருவழியாக பகலவனின் வீட்டை கண்டுபிடித்து உள்ளே செல்கிறார். முனிவரை நன்கு உபசரிக்கிறார் பகலவன். சிறிது நேரம் கழித்து முனிவர் பேச்சை ஆரமிக்கிறார். என்னுடைய குருநாதர், நீங்கள் ஒரு பெரிய புண்ணியவான் என்று கூறினார். எங்கு தவம் செய்து இவளவு புண்ணியத்தை பெற்றீர்கள் என்று கேட்கிறார். நான் எங்கும் தவம் எல்லாம் செய்யவில்லை ஐயா, என்னிடம் உதவி என்று கேட்டுவரும் அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துவருகிறேன். நான் இறைவனை வணங்குவதெல்லாம் கிடையாது. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் இருக்கிறார். ஆகையால் நான் எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன் எல்லோரிடமும் அன்பு பாராட்டுகிறேன். தவம் பற்றி நான் அறியேன் என்கிறார். பகலவன் தன்னுடைய தவத்தை பற்றி கேவலமாக பேசுகிறார் என்று எண்ணி அவருக்கு கை கால் விளங்காமல் போகட்டும் என்று முனிவர் சாபம் அளிக்கிறார். ஆனால் அவருடைய சாபம் இந்த முறை பலிக்கவில்லை. பகலவனோ, தங்கள் மனம் புண்படும் படி நான் பேசியது தவறு தான் என்னை மன்னியுங்கள் என்கிறார். ஆனால் முனிவர் மன்னிப்பதாக இல்லை மீண்டும் சாபம் அளிக்கிறார் ஆனால் சாபம் பலிக்கவில்லை. முனிவரிடம் பகலவன் மென்மையாக கூறுகிறார், ஐயா நீங்கள் எத்தனை முறை சாபம் அளித்தாலும் எனக்கு பலிக்காது. எனக்கு மட்டும் இல்லை இனி யாருக்கும் பலிக்காது. உங்கள் தவ வலிமை முழுவதையும் நீங்கள் அழகிய பெண்ணுக்கும், வழிப்போக்கனுக்கும், விறகுவெட்டிக்கும் சாபமிட்டே தீர்த்துவிட்டீர்கள் என்கிறார்.   முனிவர் தன் தவறை உணருகிறார். பின் பகலவன் தன் புண்ணியத்தில் ஒரு பாதியை அந்த முனிவருக்கு தானமாக தருகிறார். உடனே அவர் தன் தவ வலிமையை திரும்ப பெறுகிறார். அதோடு அவர் சாபமிட்ட அனைவரும் மீண்டும் பழைய நிலையை அடிக்கின்றனர். அங்கிருந்து முனிவர் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் தன் குருநாதரிடம் வருகிறார். குருநாதரிடம் நடந்த அனைத்தையும் விவரித்த பிறகு, எப்படி தவம் செய்யாமல் பகலவன் இத்தனை வலிமைகளை பெற்றான் ? இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறார். ஒருவர் செய்யும் தானமும் தர்மமும் தவத்தால் கிடைக்கும் விலைமயை விட அதிக வலிமை கொண்டது என்கிறார் குருநாதர். சரி இப்போது பகலவன் தன் புன்னியத்தின் ஒரு பாதியை தானம் அளித்துவிட்டதால் அவன் வலிமை குறைந்திருக்காதா என்று கேட்கிறார். நிச்சயம் குறையாது. அவன் தன் புன்னியத்தையே தானம் செய்ததால் அவனுடைய வலிமை இதனால் பன் மடங்கு அதிகரித்துள்ளது என்றார் குருநாதர்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.