நண்பனில் யார் நல்ல நண்பன், கெட்ட நண்பன் என்பதா?
நண்பன் என்றாலே நல்லவன்தான் என்ற வசனம் சினிமாவிற்கு
வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் உண்மையில்... நண்பர்களில் கெட்ட குணம் கொண்ட நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கிய உறவாக இருக்கும் நட்பு, வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்றும் கூறலாம். ரத்த பந்தமின்றி, சாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து என பல பாகுபாடுகளைக் கடந்து உதிக்கும் நட்பு, அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.
பலருக்கு பல சூழ்நிலைகளில் ஆதரவாக, உதவியாக நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான நேரங்களில் கொண்டாடவும், துக்கமான நேரங்களில் தேற்றவும், கடினமான நேரங்களில் உதவி புரியவும் என ஒட்டுமொத்தமாக குடும்பத்தினரைத் தாண்டி - உறவினர்களைத் தாண்டி - வாழ்வில் ஒரு சிறந்த துணையாக ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுவதே நட்பு என்று கூறுவது உண்மைதான். எனினும் நட்புலகில் சில தீயநண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நல்ல நண்பர்களால் எந்தஅளவுக்கு நன்மையோ, அதைவிட பன்மடங்கு தீமை தீய நண்பர்களால் ஏற்படுவதும் நிகழ்கின்றது.
தீய நண்பர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்களிடம் இருந்து எப்படி ஒதுங்கிக் கொள்வது?
முழுக்க எதிர்மறை கருத்துகளை மட்டும் கொண்டிருப்பவர்கள் எந்த நேரத்திலும் உங்களிடமும் எதிர்மறை கருத்துகளை மட்டுமே பேசுவார். அப்படி இருந்தால் அவர் உங்களுக்கு தீய நண்பர். நீங்கள் ஒரு செயலை செய்ய முற்படும்போது இது உன்னால் முடியாது என்று எதிர்மறையாகப் பேசுபவர், உங்களின் தன்னம்பிக்கையை குலைப்பவர், எப்படி உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க முடியும்? அப்படிப்பட்டவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் உங்களைப் பாராட்டத் தயங்குவார்கள். மாறாகஉங்களுடைய செயல்களில் குறை கண்டுபிடித்து கூறுவார்கள்.
எனவே, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டவர்களை உங்கள்நண்பர்களாக வைத்திருங்கள்.
தேவைக்கு பழகுபவர்:
சிலர் உங்களின் நட்புக்காக அன்றி உங்களின் திறமை, சமூக அந்தஸ்து, பொருளாதாரம் போன்ற ஏதாவது ஒன்றிற்காக உங்களிடம் பழகலாம். எந்தவித எதிர்பார்ப்புமின்றி நட்பு கிடைப்பது அசாதாரணம். தங்களுடைய தேவைக்காகப் பழகுபவர்கள்தாம் இக்காலத்தில் அதிகம். இருந்தாலும் தேவைக்கு மட்டுமே பழகும் நபர் உங்களுக்குஉண்மையான நண்பராக இருக்க வாய்ப்பில்லை.
உங்களை மெச்சுவது போல உங்களிடம் ஒன்றிப்பழகி அவர்களுக்குத் தேவையானவற்றை முழுவதுமாக நிறைவேற்றிக்கொள்வார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக உங்களை நண்பராக வைத்திருப்பார்கள். அன்பு, ஆதரவு, உதவிஉள்ளிட்டவை இரு தரப்பிலும் பரிமாறப்பட்டால் மட்டுமே அது நல்ல நட்பு.
எல்லைக்குள் வைத்திருப்பவர்:
உங்களுடைய நண்பர் அழைக்கும்போதெல்லாம் உங்களுடைய அனைத்து வேலைகளையும் பற்றி கவலைப்படாமல் நீங்கள் அவருடன் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ஆனால் அந்த நண்பர்நீங்கள் அழைக்கும்போது வராமல், தன் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்கிறார் என்றால், அவர் உங்களைப் பயன்படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அதைவிட ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அவர் உங்களை நிறுத்தி வைத்திருக்கிறார் என்றே கருத வேண்டும். அவரின் சொல்லுக்கு நீங்கள் கட்டுப்படுவதைப் போலவே உங்களுடைய சொல்லுக்கும் அவர் கட்டுப்பட வேண்டும். அதுவே உண்மையான நட்பு. இவ்வகையான தீய நண்பர்களிடம் இருந்து விலகாவிட்டால்உங்களின் நேரமும் ஆற்றலும் தேவையின்றி செலவாகும்.
நாடகமாடுபவர்:
சிலர் நீங்கள் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் உங்களைத் தேற்றுவதுபோல நாடகமாடி பின்புறத்தில் நீங்கள் பிரச்னையில் இருப்பதை மனதுக்குள் ரசிப்பார்கள். பல நேரங்களில் கோபமாக பேசி உங்களைக் காயப்படுத்திக் கொண்டேநண்பர் ஒருவர் உங்களை மற்றவர்கள் முன்னால் தாழ்த்திப் பேசினால் அவர் உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க முடியாது. நகைச்சுவையாகப் பேசுவது
போல நண்பர்கள் முன்னிலையில் கிண்டல் செய்வது, நக்கலடிப்பது போன்றவற்றை உண்மையான நண்பர் செய்ய மாட்டார்.
என் வாழ்க்கையில் நான் சந்தித்து வரும் நண்பர்கள் எல்லாம் சிறு தொலைவில் நின்று விடுகின்றனர். நெடு நாள் பயணம் உங்களுக்கு இருப்பின் நீங்களும் அதிரஷ்ட சாலிகள் நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா’ என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டோட்டில்.
நட்பின் பிணைப்பையும் இணக்கத்தையும் சொல்லும் ஓர் அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.
நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள், சில நண்பர்கள் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.
வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறது.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். ‘கூடா நட்பு கேட்டாய் முடியும்’ என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அதுதான்.பொதுவாகவே பெரும் அறிவாளியாக இருப்பவர்கள் உயர்தரமான நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். `உன் நண்பன் யார் என்று சொல். நீ யார் என நான் சொல்கிறேன்!’ என ஒரு பழமொழி உண்டு. மக்கட்செல்வம் எனக் குழந்தைச் செல்வத்தைச் சொல்கிறோம். நட்பும் ஒரு செல்வம்தான். நட்புச் செல்வம் யாருக்குச் சரியாகவும் அதிகமாகவும் அமைகிறதோ அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். சந்தோஷமான வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
உறவும் நட்புமாகவே நடக்கிறது வாழ்க்கை. உறவு நேர்வது. நட்பு தேர்ந்தெடுப்பது. உறவில் ரத்த பந்தங்கள் அனைத்தும் தானாய் அமைவனவே. கணவன்-மனைவி உறவு மட்டும் தேர்வு செய்து ஏற்படுத்திக் கொள்வது. எனவே அந்தக் கணவன்-மனைவி உறவை மட்டும் சட்டத்தால் ரத்து செய்ய இயலும். மற்றபடி ரத்த சம்பந்தத்தால் நேர்ந்த எந்த உறவையும் ரத்து செய்ய இயலாது.
`இவள் என் மூத்த சகோதரி. இவர் என் ஒன்றுவிட்ட அண்ணன். இவள் என் மாமா பெண். இவர்களுடன் எனக்கு எந்த வகையிலும் சரிப்படவில்லை. எனவே இவர்கள் உறவை நான் முற்றிலுமாக ரத்து செய்ய விரும்புகிறேன்!’ என்று எந்த நீதி மன்றத்திலும் வழக்குத் தொடுத்து இத்தகைய உறவுகளை நாம் ரத்து செய்ய இயலாது. வாழ்நாள் முழுவதும் இவர்களைச் சகித்துக் கொண்டு இவர்களுடன் வாழ்ந்துதான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. வேண்டுமானால் சண்டை போட்டுக் கொண்டு விலகி இருக்கலாம். அப்படி விலகி இருந்தாலும் உறவு ரத்தாவதில்லை.
நம் ஆன்மிக மரபின்படி இவர்கள் யாரேனும் காலமானால் நமக்குத் தீட்டு உண்டு. நாம் எத்தனை சண்டைபோட்டு விலகியிருந்தாலும் அந்தத் தீட்டு கட்டாயம்உண்டு! ரத்த சம்பந்த உறவுகள் நமக்குப் பிடித்தாலும் பிடிக்காமல் போனாலும் ஒருபோதும் ரத்தாவதே இல்லை. ஆனால், நட்பு விஷயம் அப்படியல்ல. விரும்பினால் நண்பர்களாக இருக்கலாம். இல்லையென்றால் பிரிந்துவிடலாம். நமக்கு முற்றிலும் சரிவராதவர்களோடு நாம் நட்புப் பாராட்ட வேண்டிய அவசியம் என்ன?
நட்பு நாம் தேர்ந்தெடுக்கக் கூடியது என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
`கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.’சொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பவர்களின் நட்பு பெரும் கெடுதலைத் தரக் கூடியது. அப்படிப்பட்டவர்களைக் கனவிலும் நண்பர்களாகக் கொள்ளக் கூடாது
கோ. புவனா
You must be logged in to post a comment.