How to do blockbuster weightloss

 

burning-candle-with-bouquet-flowers-sofa-home-decorgenerative-ai_841229-13956.jpg

 

 

 

 

"வாழ்க்கை ஒரு cinema cinema

3 மணி நேரம் தான்..

3 மணி நேரம் போல

3 மாத WEIGHT LOSS JOURNEY தான்".

பசி பட படப்பு , 

ருசி படப்பிடிப்பு,

மனம் பரிதவிப்பு, 

இறுதியில் எடை அதிகரிப்பு...!

 

Cravings (not real hungry), Addictive to food இவைகள் தான் 

எடைக் குறைப்பின் எதிரிகள்.

இவை கேட்பவைஉணவு அல்ல உதிரிகள்.

 

உண்மையான பசிக்கு மட்டும் உணவு அருந்திவிட்டு,cravings போன்ற addictive problemsயைத்தான் நாம் Deal செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்..

cravings போன்ற எண்ணம் உதிக்கும்போதெல்லாம் எதாவது பிடித்ததை செய்ய பழகுங்கள்.

பிடித்த சினிமா பார்க்கப் பழகுங்கள் .

அது உலக சினிமாவோ உதய்ணா சினிமாவோ (குறிப்பு:மாமன்னனும் உலகத்தர சினிமாதான்) 

சினிமா பார்க்கும்போது சிக்கன் 65 சாப்ட தோணுமே!

சிப்ஸ் போன்ற சிலபல தீனிக்கள் உடம்புக்கு கேட்குமே! 

ஆமால்ல..கேக்கும்ல்ல...

அப்போ என்ன சாப்டறது...?

இப்போதுதான் நாம் விரும்பி உண்ணும் உணவிற்கு மாற்று உணவை சேர்க்க முயற்சிக்கனும்..

 

பெரிய மாற்றங்கள் விரைவில் விரக்தியை கொடுப்பவை..

சிறிய மாற்றமே நம் லட்சியத்திற்கு விறகு தீயைக் கொடுப்பவை..!

ஆக

ஒரு சிறிய மாற்றத்திலிருந்து தொடங்குவோம்!

                   fattoush-salad-with-zatatar-pita-chips.jpg

 

சிப்ஸ் போன்ற சிலபல தீனிக்கள் என்று நீங்கள் கூறியதிலிருந்து சில மாற்றம்.

சிப்ஸ் சிலதாகவும் சாலட் காய்கறிகள் பலதாகவும் ஆக்கிக்கொள்வோம்.

சிறிய மாற்றத்திலிருந்து தொடங்கி இன்று டிஜிட்டலாக நம் கையில் அமர்ந்து கண்முன் விரியும் சினிமா போல!நாம் சிறிய மாற்றத்திலிருந்தே தொடங்குவோம்..

 

கண்ணிற்கு ருசி தரும் சினிமாக்கள் காணும்போது வாயிற்கு ருசி தரும் சில உணவுகள் உண்பது வாடிக்கையே...!

அது வாரம் ஒருமுறை மட்டும் அமைந்தால் நமது உடலுக்கு காணிக்கையே..!

 

இயக்குநர் சிறுத்தை சிவா ஓர் நேர்காணலின் போது

நெறியாளர்: 

"நீங்கள் எப்படி இவ்வளவு கமர்ஷியலாக படம் பண்ணி வெற்றி காண்கிறீர்கள்?"

சிவா சார்:

"சிறிய வயதில்  ஓர் தனி ரூமில் அமர்ந்து கொண்டு ஒரே நாளில் நிறைய படங்கள் பார்க்கும் பழக்கமுண்டு.

கையில் சிப்ஸ் போன்ற நொறுக்குதீனிகள் எடுத்துக்கொண்டு படம் பார்ப்பது மட்டுமே எனது முழு நேர வேலை."

 

இந்த நேர்காணலில் இரண்டு விடை கிடைக்கிறது.

1.அவர் பார்த்த படங்களின் மூலம் அவர் பெற்ற கதைஞானம் மூலம் அவர் படங்கள் வெற்றி நடை போடுகின்றன.

2.அவர் உண்டு மகிழ்ந்த பண்ட பாத்திரங்களால் அவர் உடல் வெற்றி எடை போட்டுவிட்டன.

(மன்னிக்கவும் சிவா சார்)

 

 

தீர்வு:

 

தினமும் சினிமா பார்க்கும் சினிமா காதலனுக்கும், சினிமா பார்த்துக்கொண்டே ஸ்லிம் ஆகத்துடிக்கும் சீரியசான நபருக்கும், ஆரோக்கியம் மற்றும் ருசியான உணவாய் நான் பரிந்துரைக்க முனைவது

வெட்டிய வெள்ளரிக்காயும்

வெங்காய தக்காளி வெஜ் சாலடும்;

or

கட் செய்த கேரட் பீஸும்

Dip பண்ண கொண்டைக்கடலை துவையலும்(hummus);

Or

Egg white எக்கச்சக்கமாகவும்

Buck wheat பருப்பு கடைசலும்;

or

பிடித்த  fruit சாலட் மென்று

கடிக்க கடலை மிட்டாய் ஒன்று..

 

மேற்கண்ட சிற்றுண்டிகளை;

மேற்கொண்டு சாப்பிடாமல்;

நீர் கொண்டு முடித்துவிட்டு

நீட்டித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமாவை...

 

அதாவது இனிமேல் காண்பது oppenheimer என்றாலும் உண்பது protein fibre தான் என உறுதி மொழி ஏற்போம்...

இனி

"கண்ணுக்கு சினிமாவோடு

நாவிற்கு சிற்றுண்டி

காதுக்கு இசையோடு

காலிற்கு நடைப்பயிற்சி"

என

'அறிவுரை கூறும் எண்ணம் இல்லை ஆனால் பரிந்துரை சொல்ல கடமை உண்டு'.என்று கூறி

வாழ்க்கை ஒரு சினிமா சினிமா

3 மணி நேரம்தான்

3 மணி நேரம் போல

3 மாத weightloss journeyயும் 

Blockbuster வெற்றி நடை( not எடை )போட வாழ்த்துகள்...!

 

 

 

 

 

 

 

 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author