how to attack cyclone தாக்குமா சூறாவளி ? தப்புவது எப்படி ! மாண்டஸ் புயல்

சென்னைக்கு அருகே 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்- இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது 

 சென்னை: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் சூறாவளி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 5-ந் தேதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. பின்னர் இது புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் தற்போது தீவிர புயலாக வலுவடைந்து உள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது.

  இப்புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது. மணிக்கு 15 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வடதமிழகம், புதுச்சேரியிலும்  மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தற்போது மான்டாஸ் புயல் தீவிரம் எடுத்துள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேருந்துகள் இயங்காது: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாண்டாஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து 520 கி.மீ தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. அதனால் அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த புயலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தற்போதைக்கு கடற்கரைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  புயலால் பலத்த காற்று வீசும் என்பதால் மரங்களின் கீழ் மக்கள் நிற்க வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிதீவிரமடைந்துள்ள மாண்டஸ் புயல் எதிரொலியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், வேலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன

தற்போது வரும் புயலுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடும் அளவிற்கு மிக வேகமாக காற்று வீசுவதோடு, அதி கனமழை பெய்யும் என குறிபிடப்பட்டு வருகின்றது. இது போன்ற பேரிடரிலிருந்து காத்துக் கொள்ள நாம் அதற்கான் முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியம்.

புயல் தாக்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

• புயல் தாக்கும் பகுதியில் இருப்பின், உங்களுக்கான அடிப்படை ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

• வீடுகளின் நிலையை உறுதியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஓடு, ஆஸ்பெடாஸ் போன்ற மேற்கூரை இருப்பின் அதன் கூரை திருகுகள் சரியாக  இருக்கின்றனவா என்பதை சோதித்துக் கொள்ளவேண்டும்.

• வீட்டருகில் மரம் இருப்பின், வீடு மேல் அதன் கிளை விழும் அபாயம் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும்.

• புயல் விபரங்களை அறிந்து வைத்துக் கொண்டு 12 மணி நேரத்திற்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

• உங்கள் செல்லப்பிராணிகளை எங்கு தங்க வைப்பது என்பதை ஏற்பாடு செய்யுங்கள். • அவசரகாலத்திற்கான விளக்குகள் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

• உங்கள் சுற்றத்தாருக்கு புயல் எச்சரிக்கை பற்றி தெரியவில்லை எனில் தெரியப்படுத்துங்கள்.

• குடி நீர் தேவையான அளவு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் • உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்துங்கள். புயல் தாக்கும் போது என்ன செய்ய வேண்டும்

• புயல் தாக்கும் போது உங்கள் வீட்டின் மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுங்கள். வீட்டு உபகரணங்கள் அனைத்தின் பிளக்கையும் எடுத்து விடவும்.

• அவசரகால உபகரணங்களை அருகில் வைத்துக் கொள்ளவும்.

• பேட்டரி ரேடியோ மூலம் புயல் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

• இனி பாதிப்பு இல்லை என கூறும் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

• புயலுக்கு பின் என்ன செய்யவேண்டும் :

• வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது மின்சார வயர்கள் அறுந்து கிடந்தால் உடனே மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்

. • ஈரமான கையுடன் மின்சாதனத்தை ஆன் செய்யாதீர்கள்

. • தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அல்லது சுத்திகரித்து பின் குடிக்கவும்ம்.

• மின்சார வயர் மீது மரம் முறிந்து விழுந்திருந்தால் அருகில் செல்லாதீர்கள்

. • உங்கள் வீடு புயலால் சேதமடைந்திருந்தால் உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்களுக்கான உதவியை பெறுங்கள்.

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author