How she tolerate the labour pain

         மகப்பேற்று வலி

 

 பிள்ளை பேரின்றி தவித்த அவளுக்கு இறைவன் கொடுத்த வரம் தான் அவளது மகள் 

ஐந்து வருடங்கள் பாலை நிலமாய் இருந்தாள் 

பல கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளானேன்   ஏன் இந்த பிறவி என்று நொந்து நைந்து வருந்தினாள்.  இருப்பினும் கடவுள் நம்பிக்கை அவளை கைவிடவில்லை தொடர்ந்து இறைவனிடம் மன்றாடினால் அவள் அழுகுரல் கடவுளுக்கு கேட்கும் வரையில் . வருடங்கள் கடந்தன,வருத்தங்கள் அதிகமாயின. 

ஒரு நாள் 5 நாட்கள்  தள்ளி போனது. ஒவ்வொரு முறையும் அதே நம்பிக்கையோடு சிறுநீர் சோதனை செய்து பார்ப்பாள் எதிர்மறை முடிவுகள் மட்டுமே வந்தது ஆனால் அன்றோ ! நேர்மறையான  முடிவு வந்தது

அவளால் சந்தோசம், அழுகை , ஆச்சர்யம் என மூன்றும் ஒரே நேரத்தில் திழைத்தது.

நம்ப முடியாமல் கதி கலங்கி நின்றாள், கணவன் வருதற்கு 3 மணி நேரங்கள் ஆகும் அது வரை அவள் காத்திருக்க முடியவில்லை, தொலைபேசியில் சொல்லலாம் என்றால் சந்தோசமான விசயம் என்பதால் அவள் நேரில் சொல்ல வேண்டும் என்று நினைத்து காத்திருந்தாள் .

கணவனும் வந்தான்!அவள் அவன் அப்பாவான விஷயத்தை கூறவே!பொய் சொல்லாதே என்று சொல்லி  சென்று விட்டான் .

பிறகு மறுமுறை சோதித்து உறுதி படுத்தி கொண்டான்.     பின்பு வீட்டில் உள்ளவர்களிடம் கூறி மகிழ்ந்தனர். மருத்துவமனை சென்றும் உறுதி படுத்தி கொண்டனர். நாட்கள் சென்றது.

மாமியார் கொடுமை நிறைந்து அவள் வாழ்க்கை , அவளுக்கோ கெட்ட எண்ணம் இவளுக்கு குழந்தை பிறந்தால் மகன் தன்னை விட்டு பிரிந்து விடுவான் என்ற எண்ணத்தில், அவள் கற்பத்தை கலைப்பதற்கு  திட்டம் தீட்டினால் , அவள் படுக்கும் இடத்தில் எண்ணெய் ஊற்றி விட்டால் அவள் காலை எழுந்து கால் வைத்த உடன் வழுக்கியது அவளோ பக்கத்தில் உள்ள மேசையை பிடித்து சுதாரித்து கொண்டால்,இதை பற்றி தன் கணவனிடம் கூறிய போது! தன் தாய் தெரியாமல் ஊறியிருப்பால் என கூறினான்.

எண்ணெய் ஊற்றிய இடத்தை துடைக்க கூட இல்லை,மறுமுறை அவள் நடக்கும் பாதையில் ஊற்றி திரும்பவும் தெரியாமல் ஊற்றி விட்டதாக நாடகம் ஆடினாள் கிழவி! கோபமடைந்த மருமகள் ஒருமுறை மன்னித்தேன் . திரும்ப இதேபோல செய்துள்ளீர் என கூறி சண்டை போட்டால், சண்டை பெருசாகி பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலே கொண்டு அவளின் வாயில் அடித்தால் கிழவி முசந்தியில் உக்காந்தி ஒப்பாரி வைத்தால் அருகில்  இருந்த அறிவாலிகளும் அவள் தெரியாமல் ஊற்றி விட்டாதாக வக்காலத்து வாங்கினார்கள் . 

மாதங்கள் சென்றது;

9ம் மாதம் தாய்வீட்டு வளைகாப்பு போட்டு மகிழ்ச்சி பொங்க அழைத்து சென்றனர்.அவளுக்கோ குழந்தை பற்றிய பயம் ? இருந்து கொண்டே இருந்தது.எப்படி பிறக்க போகிறதோ? என்று கடவுளை மட்டுமே நம்பினால், நிறைய வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்தால், நடந்து கொடுத்தால் , இருப்பினும் தேதி நெருங்கி விட்டது வலி வர வில்லை.

விட்டு விட்டு வலித்தது, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அங்கு பரிசோதித்த  செவிலியர்கள் குழந்தை வலது புறம்  உள்ளதாகவும் சிசேரியன் செய்து தான் எடுக்க முடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

இவளுக்கோ,அழுகை தாங்கவில்லை சுகப்பிரசவம் செய்தால் குழந்தைக்கு மூச்சு அடைத்து விடும் என்று கூறியதால் தலை கால் புரியாமல் திணறி கொண்டிருக்கிறாள்.

 அவசர ஊர்தியில் பெரிய மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்க படுகிறாள்.       அங்கே குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத நிலை, வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும்  அரசு மருத்துவமனைகளின் அவல நிலை இது தான்

அவள் ஆருகில் யாரும் இல்லாத நிலையில், அவள் தாயும் கணவனும் வெளியில் இருந்தார்கள். அவர்களை உள்ளே அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டாள்,

 

முதல் நாள் மதியம் சென்றாள், வலி வரும் என்று காத்திருப்போர் பட்டியலில் சேர்த்தனர்,அவளும் தனி பிரிவில் இரவு முழுவதும் தூக்கமின்றி காத்திருந்தாள்.

மறுநாள் விடிந்தது! இவ்வளவு நேரம் விட்டு விட்டு வலித்த வலி இப்போது தொடர்ந்தது,வலது புறம் இருந்த குழந்தை இடது புறம் திரும்ப தொடங்கியது.   2நாட்கள் பிரசவ வலி என்பது சாவிற்கு சமம் அதை தாங்கி கொண்டாள்! ஏனென்றால் அவள் பெண்ணல்லவா! அதனால்,வலி அதிகமாகியது என பிரசவ அறைக்கு கூட்டி சென்றனர். அங்கு சென்றாள்,15  படுக்கை இருந்தன.அதில்  பிரசவம் பார்த்து கொண்டு இருந்தனர். இவளை வெளியில் காத்திருக்க கூறினார். இவளும் அந்த வழியில் ஒரு நாள் முழுவதும், வெளியில் இருந்த கழிவறை வாசலில் படுத்து கொண்டு அழுகிறாள். அருகில் யாரும் இல்லை. கணவனோ கொசுக்கடியில் வெளியில் காத்திருக்க, தாயோ இவளின் அழுகுரல் கேட்க மனமில்லாமல் வெளியே அழுது கொண்டுள்ளார்.

மதியம் 6மணியானது இன்னும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. வெளியில் அமர்ந்திருந்த தன் கணவனிடம் "வேறு மருத்துவமனைக்கு சென்று ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.என கூறிகொண்டு இருந்தாள். வலி தாங்காமல் தன் கணவனை பிடித்து கொண்டு சிறிது நேரம் நடக்கவே! திடீரென பனிக்குடம் உடைந்தது! அவளுக்கோ அளப்பரியா இன்பம் , இனியாவது உள்ளே அனுமதிப்பார்கள் என்ற எண்ணம்! உள்ளே சேர்த்து விட்டார்கள்.

 மறுபடியும் ஸ்கேன் எடுத்து வர சொல்லி அனுப்பிவிட்டார்கள் ஸ்கேன் செய்ய சென்றால் டாக்டர் சோதித்த பின்னர் உதிரம் போக ஆரம்பித்தது நடந்த தடம் எல்லாம் கொட்டியது பின்னர் படுக்கையில் வைத்து குளுகோஸ் போட்டனர்.

6மணிக்கு உடைந்த பனிக்குடம் நள்ளிரவு 11 மணி ஆயிற்று இன்னும் குழந்தை வெளி வர வில்லை 6மணி முதல் 11 மணி வரை வலி அனுபவித்தாள். 

  படுக்கையில் படுக்க முடியவில்லை  சொல்ல முடியாத வலி. கத்தி கொண்டே இருந்தாள்.அவள் தாயை அழைத்தால் அவள் வர வில்லை காரணம்?அவள் துடிப்பதை காண மனமில்லாமல் வாசலிலே நிற்கிறாள்.பின்பு அவளாகவே உள்ளே வந்து தன் மகளை பார்த்து கண்ணீர் வடித்து கடவுளிடம் வேண்டுகிறாள். 

வழியில் துடித்து கொண்டே இருக்கிறாள் என்று திருநீர் எடுக்க வெளியே வந்தாள். அப்போது குழந்தை தலை வெளி வருவதை கண்டு டாக்டரை அழைத்தாள்.8பேர் சேர்ந்து பிரசவம் பார்த்தார்கள் காரணம் குழந்தையின் தலை பெரிதாக இருந்தது ஒரு வழியாக அவள் பட்ட பாட்டிற்கு முடிவு கிடைத்தது.

அழகிய பெண்குழந்தை!  பிறந்தது.   

 அவளுக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்ற ஆசை இருந்தது அவள் பிறந்த பிறகு வருந்தினாள்! தன்னை போலவே இவளும் எல்லா வழிகளையும் அனுபவிப்பதற்கு  பெண்ணாய் பிறந்து விட்டாலே என்று எண்ணி கண்ணீர் வடித்தார்.

கர்ப்பிணியாக இருக்கும் போது பச்சை தண்ணீர் கூட கொடுக்காத ராட்சசி மாமியார் குழந்தை பிறந்தவுடன் பேரப்பிள்ளை என்று பார்க்க வருகிறாள்.

 இந்த கதை மூலம் கூற விரும்புவது ஒன்று மட்டுமே மருமகளையும் மகளை போல நேசியுங்கள்! அவள் தாயை விட ஒரு படி உயர்வாய் வைத்து கொள்வாள் என்பதே!

பெண்ணியம் பேசும் ஆணினமே வெளியில் பேசிவிட்டு வீட்டிற்குள் பெண்ணை அடிமையாக்காதே! 

 

 

 

நன்றி.  

 

 

 

Article by bhuvana

 

 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author