பாப்பா, எழுந்திருமா! நேரமாயிற்று, சீக்கிரம் எழுந்து ரெடியாகி அப்பா, அம்மாவிடம், ஆசிர்வாதம் வாங்குவாமா! என்றான் விஷ்ணுவேந்தன்.
"அய்யோ, அண்ணா! இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேண்ணா!" பிளீஸ், என்று திரும்பிப்படுத்தவளிடம், பாப்பா, எழுந்திரின்னு! மீண்டும் குரல் கொடுக்க, "ச்ச, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமே! இல்லையா? கொஞ்ச நேரம்கூட தூங்கமுடியவில்லை, அதுவும் இன்றைக்குகூடவா!"
இன்று என்ன நாள் தெரியுமா? இன்று என்னுடைய நாள், என் விருப்பப்படி தானே எல்லாம் நடக்கணும், மறந்துட்டீங்களா? இன்று என் பிறந்தநாள் என்றால் சுபிக்ஷா.
"ம், அதனால் தான் சொல்கிறேன் சீக்கிரம் ரெடி ஆயிட்டுவா! என்று விரைந்தான் விஷ்ணுவேந்தன்."
ஏதேதோ! புலம்பியபடி செல்லமாக சினுங்கிக்கொண்டே குளியல் அறையினுள் நுழைந்தாள் சுபிக்ஷா.
காலம் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது, என் தங்கை எவ்வளவு பெரிய பெண்ணாக வளர்த்துவிட்டால் என்று யோசித்தவனிடம், என்னண்ணா! என்னை தூங்கவிடாமல், எழுப்பிவிட்டு இப்ப நீங்க உட்காந்திட்டே தூங்கிட்டு இருக்கீங்கபோல, என்று அவன் முகத்தின் முன் தன் கை அசைத்து இரு விரல்களால் சுண்டிவிட, "ச்சச்ச, அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா!" உன்னை பற்றி தான் யோசித்தேன், "சரிசரிவா! அப்பா, அம்மாவிடம் ஆசீர்வாதம்வாங்க என்று இருவரும் பூஜை அறையினுள் நுழைந்தனர்."
அங்கே! சிறிய ஏட்டுப்பலகையில் 'அப்பா, அம்மா' என்ற எழுந்துவடிவத்தை மஞ்சள் இட்டு அதன் முன், சுபிக்ஷா விளக்கேற்ற இருவரும் வணங்கினர்.
"பாப்பா, என்று அழைத்த விஷ்ணு!" இது என் செல்ல தங்கைக்கு தங்கத்தால் பரிசு என்று அவள் விரலில் மோதிரம் போட்டுவிட்டான்.
"அய், சூப்பர்ண்ணா!" நம்ம ரெண்டுபேருடைய பெயர்களின் முதல் எழுத்து பொறிக்கப்பட்டு அழகாக உள்ளது என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
"ம்ம், அண்ணா" அப்புறம் இந்த வருடத்தில் இருந்து எனக்கு 23வயது ஆயிற்று, ம், ஆமாம்! பாப்பா, இப்ப அதுக்கென்னமா? இப்படி "பாப்பானு" கூப்பிடாமல் இனிமேலாவது பெயர் சொல்லி கூப்பிடுணா!" என் தோழிகள் எல்லாம் கிண்டல் செய்து சிரிக்கிறாங்க, நான்! என்ன குழந்தையா? என்று கேட்டவளை, "மண்டு, மண்டு, என்று செல்லமாக அவள் தலையில்கொட்டி, இப்ப மட்டுமல்ல, உனக்கு திருமணம் ஆகி உனக்கு ஒரு குழந்தை பிறந்தாலும், அப்பவும் நீ! எனக்கு குழந்தைதாண்மா! என்றான் சிரித்துக்கொண்டே
சரி அதெல்லாம் போகட்டுவிடு, உனக்கு வேறு என்ன வேண்டும், உனக்கென்று ஆசைகள் இருக்கும், அப்படி ஏதாவது உண்டா? சொல்லுமா, என்றான் அன்போடு.
"ம், ஆமாம்ணா! கண்டிப்பாக உள்ளது" இது என் ரொம்ப நாள் ஆசைன்னுக்கூட சொல்லலாம், நான் பிறந்தப்ப எப்படியோ, அது எனக்கு தெரியாது, ஆனால்! எனக்கு விவரம் தெரிந்தகாலம் முதல் உன்னை மட்டுமே பார்த்து வளர்த்துள்ளேன். "அப்பா, அம்மா, இருவருமாய் உன்னைத்தான் பார்க்கிறேன். இருந்தாலும் மனசுக்குள் ஒரு சின்ன ஆசை, நம் அப்பா, அம்மாவை பார்த்ததே இல்லையே, ஒரு நிழல்படம் கூட நம்மிடம் இல்லாமல் போயிற்றேன்னு வருந்தியுள்ளேன் என்றால் கண்கலங்கியபடியே".
பாப்பா, நீ! அழக்கூடாதுடா! என்று அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டே இப்ப என்னம்மா, அப்பா, அம்மாவை, பார்க்கணும் இவ்வளவுதானே, இதுக்குபோய் அழுதுட்டுனு அவளை தட்டிக்கொடுத்து, இருவருகிறேன்னு சுபிக்ஷா ரூமிர்க்குள் நுழைந்தான்.
இப்ப எதுக்கு நம்ம ரூம்க்கு, சென்றாங்க அங்கு என்ன இருக்கு ஒரு வேளை நமக்கு தெரியாமல் போட்டோ ஏதாவது வைத்திருப்பாங்களா? என்ற குழப்பத்தோடும், எதிர்பார்போடும், அமர்ந்திருந்தாள்.
"பாப்பா, பாப்புக்குட்டி, சுபிகண்ணா!" என்று சற்று மெல்லிய குரல் ஒளிக்க வேகமாக எழுந்தவளுக்கு அதிர்ச்சி தருவதுபோல் பெண்மணியின் அணிகலங்கள், உடை, உட்பட அணிந்துகொண்டு விஷ்ணுவேந்தன் நடந்து வந்தான்.
"அண்ணா! என்று அழைக்க முடியாமல் வாயடைத்து நின்றாள்".
என்னம்மா! ஆச்சிரியம்மா, பார்க்கிற நான்! தாண்டா, அம்மா! என்று கூற, சிரிப்பதா? அழுவதா? என்ற நிலையில் விஷ்ணுவையே பார்த்தாள்.
பாப்பா! அம்மா, அடிக்கடி சொல்லுவாங்க நான் அப்படியே அவுங்கள மாதிரியே இருக்கேனு அதாண்டா, இப்படி வந்தேன். இப்ப நல்லாபார்த்துக்கொள், அம்மா! எப்படி எவ்வளவு அழகா! இருக்காங்கனு, சொல்லும்போதே! சற்று வேகமாக சிரித்துக்கொண்டே என் அண்ணன், அம்மாவாக! வந்த அழகோ அழகுன்னு, விஷ்ணுவின் கண்ணங்களை கிள்ளி முத்தமிட்டாள்.
இருவரும் சிரித்து கொள்ள, சரி இப்ப நான்! அப்பாவையும் பார்க்கணுமேன்னு சுபிக்ஷா சொல்ல, அதுக்கென்ன பார்த்துட்டா போச்சின்னு, சுபிக்ஷாவை தன்னுடைய ரூமிர்க்குள் அனுப்பி, "ம், போ, போ! இப்ப நீ! அண்ணன் மாதிரி வா!" சீக்கிரம்னு அனுப்பிவைத்தான்.
"ஓகே, ஓகே!" என்றபடி நுழைந்தவள், வேட்டிசட்டையில், அமக்கலமாக வருவதை விஷ்ணு ஆச்சிரியமாக பார்த்தான்.
என்னண்ணா! எப்படி இருக்குனு கேட்க, பாப்பா, அப்படியே அப்பாவை பார்த்ததுபோல் இருக்குமா! உண்மையாகவே, என்று உருக்கமான குரலில் சொல்ல, "அய், அப்படியா! என்று சிரித்தாள்".
அண்ணா! உண்மையா நான்! ரொம்ப சந்தோஷமாக இருக்கேன், அப்பா, அம்மாவையும் பார்த்துவிட்டேன் எனக்கு இருந்த ரொம்ப நாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கேன் என்றாள்.
"ம், தெரியும்டா! என் முகத்தில் அம்மாவையும், உன் முகத்தில் அப்பாவையும், காணும்போது நமக்கு அவர்கள் இல்லை என்ற குறையும் இருக்காது என்றான்".
அப்பா! குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிதால் நீ! பிறந்த ஓரிரு மாதங்களில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு அம்மாவின் உழைப்பு மட்டுமே, அதுவும் உனக்கு இரண்டு வயது, அம்மா! உடல்நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாகி ஒரு கணத்தில் அவர் உயிரும் பிரிந்துவிட்டது.
அன்று உறவினர் என்று நூறுபேர் இருந்தாலும், நான் மட்டும் தனிமையில் இருவரையும் இழந்த நிலையில் நின்றபோது, சற்று தொலைவில் இங்கு என்ன நடக்கின்றது, எனக்கு யாரும் இல்லை, என்பதைப்போல் "தத்தி தடுமாறிய நிலையில் சுத்தி, சுத்தி, அழுதுகொண்டே அங்கும், இங்கும், பார்த்தபடியே திரிந்த உன்னைகண்டு, என் தங்கமே! உனக்கு நான் இருக்கேன்டா, என்று ஓடிவர என்னை கண்டதும், அம்மா! என்றபடி நீ! அழுதுகொண்டே கை நீட்டி, தத்தி, தத்தி, ஓடிவந்த உன்னை வாரி அணைத்து முத்தமிட்டு, என் பாப்புக்குட்டிக்கு அண்ணன் நான் இருக்கேன், எனக்கு எல்லாமுமாய் என் தங்கை இருக்கியாள்". என்று வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்தது, மேலும் நாம இந்த நிலையில் வாழ காரணமானவர்களையும் நான் அடிக்கடி நினைத்து நன்றி சொல்லிக்கொள்வேன்.
அந்த சிறுவயதில் அவர்கள் உதவி இல்லை என்றால், இருவரும் திண்டாடி போயிருப்போம் என்று கூறும்போதே! அண்ணா, என்று சத்தமிட்டு அழுதுகொண்டே விஷ்ணுவை அணைத்துக்கொண்டால். "ச்ச, அந்த வயதில் என்னையும் வைத்துக்கொண்டு நீ! எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பாய் என்றாள்".
"ச்ச, அப்படியெல்லாம் இல்லமா!" என் பாப்பா எப்பவும் சந்தோஷமா! சிரிச்சிட்டே இருக்கணும், என்றவனை குறுக்கிட்டு என் அண்ணாவும் எப்பவும் என் கூடவே இருக்கணும்னு ஒரு குழந்தையை போல் அவன் தோள்களை பற்றிக்கொண்டாள்.
அளவு கடந்த அன்போடு இருவரும் பலவருடங்களை கடந்து வந்தனர்.
"காலம் மாறியது விஷ்ணுவும் முற்றிலும் மாறிவிட்டான்" தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் முடித்துக்கொண்டன்.
"அதோடு வாழ்க்கையில் ஒரு அங்கம்தான், அப்பா, அம்மா, தங்கை எல்லாம் என்பதைப்போல் சுபிக்ஷாவை வெறுக்க தொடங்கினான்."
என் மனைவிக்கூட ஆசையா! நாலுவார்த்தை, பேசமுடியவில்லை தனிமை என்பதே! நமக்கில்லை, எப்பப்பாரு நந்தி மாதிரி வீட்ல ஒன்னு இருக்குது, அப்புறம் எங்க நாமனு! சற்று சளிப்போடு இழுத்து, சுபிக்ஷாவை சுட்டிக்காட்டி பேசியதை, காதில் வாங்கியவள், "ச்ச இவ்வளவு தூரம் நினைக்கின்றார் இனியும் இவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது" என்ற முடிவெடுத்தாள்.
"அண்ணி! நான், எனது தோழியுடன் விடுதியில் தங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளேன், என்று ஜாடையாக விஷ்ணுவிடம் கூறும்போதே!" ஏன்! பாக்குறவுங்க இவனுக்கு பொண்டாட்டி வரவும், தங்கச்சியை அனாதைப்போல் தவிக்கவிட்டுட்டான்னு பேசுறதற்கா! அப்படி என்ன குறையை கண்டாங்கலாம் இந்த அம்மா! என்றவனிடம், "என் அண்ணன் வாய் நிறைய பாப்பா, பாப்பா என்று அழைப்பார்" இப்பலாம் என் முகத்தை பார்த்து பேசுவதையே பாவம் என்பதுபோல் நினைக்கின்றார், வேண்டாம் நான்! யார் வாழ்க்கைக்கும் இடையூராக இருக்க விரும்பல நான் கிளம்புகிறேன் என்றாள்.
நான் சொல்வதை கேள்! என்று அவள் கையை பிடித்து இழுத்த அண்ணியை, ஏய்! விடு தடுக்காத கையில காசு இல்லனா? நம்மள தேடித்தான்வரணும், விடு எத்தனை நாட்கள் நீடிக்குதுன்னு பார்ப்போம் என்ற விஷ்ணுவிடம், நான் இனிமேல் யார் தயவிலும் வாழமாட்டேன், என் வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விரைந்தாள்.
போகட்டும்விடு இப்பவாவது புத்தி வந்ததே, நீ வா, என்று தன் மனைவியை அழைத்தான்.
முதலில் எனக்கென்று ஒரு வேலையை தேடிக்கொண்டு, பின் எனக்கொரு குடும்பத்தை ஏற்படுத்திகொள்கிறேன். என் வாழ்க்கையை நானும் வாழ்ந்து காட்டுகிறேன் என்று தன் தோழியிடம் புலம்பினாள்.
மருத்துவர் கூறியதைப்போல் தன் மனைவியுடன், விஷ்ணு மருத்துவமனைக்கு சென்றான். அங்கு அவனுக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்று அதற்க்கு உண்டானவற்றை தயார்செய்தனர்.
இப்பயாவது சுபிக்ஷாவிடம் நல்ல முறையில் பேசுங்க உங்களை தவறாக புரிந்துகொண்டால், என்றவளிடம் இல்லமா! என்னைப்பற்றிய உண்மைகள் அவளுக்கு தெரியகூடாது, அவள் எப்பவும் சந்தோஷமாக இருக்கணும், நான் எது பண்ணாலும் அவள் நல்லதுக்குதான் என்று ஒரு நாள் புரிந்துகொள்வாள் என்றான்.
தன் கணவனின் பாசம் கண்டு அழுதுகொண்டே, நான் வீட்டிற்கு சென்று உங்களுக்கு தேவையானவற்றை எடுத்து வருகிறேன் என்று புறப்பட்டால்.
"சில நாட்கள் கடந்தது, கடவுள் எனக்கு மறுவாழ்வு கொடுத்துவிட்டார் என்று தன் மனைவியின் கைகளை பற்றி பெருமிதம் கொண்டான்" ஆமாங்க! நல்லபடியாக ஆப்ரேஷன் முடிந்து நீங்கள் உயிர் பிழைத்தது சந்தோஷமாக இருக்கிறது என்றால்.
இப்ப நான் செய்யும் முதல் வேலை என் பாப்பாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, நடந்தவையெல்லாம், சொல்லி அழைத்துவரணும், "ம், கண்டிப்பாங்க அவளும் புரிந்துகொள்வாள், முற்றிலும் குணமடைய, ஓய்வு எடுத்துக்கொண்டு நம்வீட்டிற்கு சென்றதும் அவளைப்போய் பாப்போம் என்றாள்.
வீட்டிற்கு வந்ததும் சீக்கிரம் ரெடி ஆயிட்டுவா! பாப்பாவை அழைத்து வரவேண்டும் என்ற சந்தோஷத்தில் தத்தளித்தவனிடம், இந்தாங்க என்று ஒரு டைரி ஒன்றை நீட்டினாள்.
இந்த நேரத்தில் இது எதுக்கு, இதெல்லாம் வந்து பார்க்கலாம் வாமா! என்றான்.
இல்லங்க ஒரு நிமிடம் பாருங்க என்றாள், சரி கொடு என்று புரட்டியவன், இன்ப அதிர்ச்சியில், "அய், பாப்பா! போட்டோ, அப்போ இது பாப்பா டைரியா!" ஏன்! என்ன எழுதியிருக்கா, என்று அடுத்த பக்கம் புரட்டினான்.
"அன்புள்ள அண்ணா! உன்மேல் கோபம் கொண்டு உன்னை தவறாக நினைத்து வீட்டைவிட்டு புறப்பட்ட நான்! என் வாழ்க்கையை வாழ்ந்து காட்டணும்னு முடிவெடுத்தாலும், உன்னை பிரிந்த கணமே! வாழ்க்கையே வெறுமையாக வெறுத்துவிட்டு உன்னை நிரந்திரமாக பிரிந்துவிட முடிவெடுத்தபோது, அண்ணி என்னை சந்தித்து உன்னை பற்றியும், மருத்துவமனையில் இருப்பதை பற்றியும் கூறினார். அதுமட்டுமல்ல அண்ணியை இன்னும் உன் மனைவியாக ஏற்று வாழ தொடங்கவில்லை என்றும், எனக்காக என் எதிர்காலத்தில் உன்னைப்போல், என்னை பார்த்துக்கொள்ள உன் இடத்தில் ஒரு ஆள் வேண்டும் என்ற எண்ணத்தை சொல்லி, அண்ணியை திருமணம் முடித்தை பற்றியும் தெரிந்துகொண்டேன். இப்படி உன் கடைசி மூச்சிவரை எனக்காகவே வாழ நினைக்கும் உன்னை நினைக்கும் போது! அதாண்ணா, நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். இனி உன்னை ஒரு கனம்கூட பிரியக்கூடாது, அதற்காக என் உயிரை விடமாட்டேன், "என் உயிர் துடிப்பிற்கு ஒரு உடல் தேவைப்படுகிறது, அந்த உடலாய் நீ இரு, உன் துடிப்பாய் என் உயிர் என்றும் உன்னுடனே இருக்கும்" மீண்டும் பிறப்பாள் "பாப்பா" உன் மகளாய்.
"அய்யோ! பாப்பா, என்ன காரியம் செய்துவிட்டாய் என்று கதறினான்" தன் மனைவியிடம் என்ன நடந்தது பாப்பாவிடம் எதற்கு சொன்னாய், என்று சத்தமிட்டு கதறியவனிடம், இல்லங்க உங்களுக்கு உடனடியாக இதயம் மாற்று அறுவை சிகிச்சை பண்ணவேண்டும் என்று மருத்துவர் சொன்னபோது, தனி ஆளா! என்ன செய்வது என்று புரியாமல் பாப்பாவிடம் நடந்தை கூறி ஏதாவது ஏற்பாடு செய்யணும்னு அழுதேன்.
கவலைபடாதீங்க என்று ஆறுதல்படுத்தியவள், அடுத்தநாள் விவரமாக "மருத்துவமனைக்கும், காவல்துறைக்கும் கடிதம் எழுதிவிட்டு தன் தோழிக்கு தெரியப்படுத்திய அடுத்தகணமே தன் உயிரை மாய்த்துக்கொண்டாள்"
அந்த நேரம் எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க மருத்துவர் ஆறுதல்படி, அந்த பெண் செய்த காரியத்திற்கு அர்த்தமில்லாம் போய்விடும், இனி நடப்பதை பார்ப்போம்னு, உங்களுக்கு பாப்பாவின் இதயத்தை பொருந்தினார்கள் என்றாள் சத்தமிட்டு அழுதபடி.
என் பாப்பா எனக்காக அவள் உயிரையே விட்டுவிட்டால், நான்! அவள் மனம் கஷ்டப்படும்படியெல்லாம் நடந்துகொண்டேனே என்று கதறினான்.
"என் பாப்பா சொன்னது நடக்கும், அவள் எனக்கு மகளாய் பிறப்பாள் மீண்டும் சுபிக்ஷா வருவாள்" என்றான் கண்ணீரோடு தன் மாணவியின் கைகளை பற்றிக்கொண்டு.
நன்றி!
You must be logged in to post a comment.