How is Breast Single

தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடித்துமுடித்துள்ள படம் பீஸ்ட் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொதுவாக விஜய் படம் என்றாலே எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய் நடிப்பதால் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் ஏப்ரலில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது

நீண்ட நாட்களாக படத்தின் பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விரைவில் வெளியிட அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகளை படக்குழு முடித்துள்ளது. இந்நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசை

 

 

படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இசையமைத்துள்ளார் அனிருத் மற்றும் டாக்டர் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டிலேயே படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை விஜய் முடித்து கொடுத்துவிட்டார்.

போஸ்டர் வெளியீடு

படத்தின் 100 நாட்கள் சூட்டிங் நிறைவையொட்டி நெல்சன் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் டிரம்ஸ் வாசிக்கும் விஜய்யை பார்க்க முடிந்தது. பூஜா ஹெக்டே பாட்டு பாடியிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வைரலானது.

பாடலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

 

படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் முதல் பாடல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். விஜய் பாடியுள்ள இந்தப் பாடலுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ட்ரெண்டான பாடல் கோரிக்கை

 

இந்நிலையில் #BeastFirstSingle என்ற ஹேஷ்டேக்கை தொடர்ந்து ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் தளபதி66 ஐயும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் ட்விட்டர் தளமே விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் காணப்படுகிறது.

பிரம்மாண்ட செட்

 

விஜய்யின் பீஸ்ட் படத்தின் சூட்டிங் ஜார்ஜியா, சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங்கை படக்குழு நடத்தியது.

கடந்த பொங்கலுக்கு இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் வசூலில் பட்டையைக்கிளப்பியதை அடுத்து நெல்சன் இயக்கத்தில் வெளிவரவுள்ள பீஸ்ட் படமும் வசூல் சாதனைப்படைக்கும் என்ற எதிர்பார்ப்பு

 

இருக்கின்றது. 

பீஸ்ட் படத்தின் அறிவிப்பு வந்து பல நாட்களான நிலையில் படத்தைப்பற்றிய பல விஷயங்கள் சமூக வளையதளங்களில் பரவி வருகிறது. பீஸ்ட் படத்தின் கதைக்களம் இதுவாக தான் இருக்கும் என்றும் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமென்றும் சமூகதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில் தற்போது படக்குழு படத்தைப்பற்றிய

 

முக்கியமான அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அநேகமாக அது பீஸ்ட் படத்தின் பாடல் வெளியாகும் தேதியாக கூட இருக்கலாம் என்றும் வரும் பொங்கலுக்கு பாடல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த சில தினங்களுக்கு பீஸ்ட் படத்தின் பேச்சுதான் சமூகவலையத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யுடன் முதலமைச்சர் திடீர் சந்திப்பு: வெளியான பரபரப்பு தகவல்!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வந்தார் விஜய். அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். 'பீஸ்ட்' படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் முதன்முறையாக அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். மார்ச் மாதம் இதன் படபிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாரை தப்பட்டைகளுடன் குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விஜய் மக்கள் மன்றத்தினர், போலிசாரிடம் வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாளை வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால், நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று களைகட்டியது.

அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, விஜய் மக்கள் மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author