தனிமையில் இருந்தாலும் தன் கணவனின் நினைவுகளோடு நாட்களை நகர்த்தியவளுக்கு ஒரு துணையாக அவளுக்குள் ஒரு அழகிய உயிர் துடிக்க ஆரம்பித்தது, இந்த செய்தியை தன் காதல் கணவனுக்கு தெரிவிக்கமுடியாமல் அவன் வருகைக்காக எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தாள்.
தன் கணவன் இன்னும் சில நாட்களில் ஒரு மாத விடுமுறையில் ஆர்மியில் இருந்து வரபோகிறார் என்று தன் கணவரின் நண்பர்மூலம் தெரிந்துகொண்டவள் சந்தோஷத்தின் உட்சத்திற்கே சென்றாள்.
ஆர்மியில் இருந்து தன் கணவர் வீடுதிரும்பிகிறான் என்ற எதிர்பார்போடு இருந்தவளுக்கு, அவன் சடலமாக! தன் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டான்.
ஊருக்கு வரயிருந்த முதல் நாள் குண்டடிபட்டு அவன் இறக்க சிலநிமிடங்களில் என் மனைவி என் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பாள், உடனே தகவல் சொல்லி அவள் மனதை கஷ்டப்படுத்திவிடாதீர்கள் "என் ஒரு உயிர் பிரிந்தாலும், நான் மண்ணில் பல உயிராய் பிறப்பேன்" என்று என் மனைவியிடம் கூறுகள் என்று அவன் உயிர் பிரிந்தது என்று கணவரின் நண்பர்கள் கூறும்போதே! அவள் கரங்களால் தன் நெற்றியில் அடித்துக்கொண்டு தன் கணவன் சடலத்தின் முன் மண்டியிட்டு கதறி அழுதாள்.
அவன் கருவை சுமந்த நிலையில், என் கணவர் இறக்கவில்லை, மீண்டும் பிறக்கின்றான், என்று மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து, கணவனின் உடலை "உடல்தானம்" செய்கிறாள்.
நாட்டுக்காக உயிரையே கொடுத்து சடலமானார், இன்று சடலமாகி பல உயிர்களாய் பூமியெங்கும் பிறக்கபோகிறார், இந்த சமூகத்தில் அவர் ஒவ்வொரு மூலையிலும் ஒரு உயிருக்கு உயிர் கொடுத்து வாழ்ந்து கொண்டிருப்பார்! நம் குழந்தைக்காக நான்! உயிர் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன், என்று கதறிய பெண்மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கின்றது.
குழந்தையின் கண்களில் தன் கணவரை பார்த்த சந்தோஷத்தில் அன்போடு அள்ளி அணைத்தவளுக்கு அதிர்ச்சி தருவது போல் இருந்தது குழந்தை கண்பார்வை குறைபாட்டோடு பிறந்திருக்கிறது என்று மருத்துவர் கூறியது அவளை கவலையில் ஆழ்த்தியது.
குழந்தைக்கு கண்பார்வை குறைவாக உள்ளது. நாளடைவில் பார்வை இல்லாமலே போக வாய்ப்பு உண்டு இதை சரிசெய்ய மாற்று கண்சிகிச்சையை மட்டுமே மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் கூறியதை நினைவில் கொண்ட தாய்! தன் கண்களை கொடுக்க யோசித்தாள், பார்வை இழந்துவிட்டு தன் மகனை வளர்க்க இயலாது என்று முடிவெடுத்தாள். குழந்தை தனது ஐந்தாவது வயதில், முழுபார்வையையும் இழக்கிறான். மனம் தளராத தாய், அவனை சமூகத்தில் நல்ல திறமைமிக்க ஆண்மகனாக வளர்த்தாள், அப்படியே சில வருடங்கள் கடந்தது இனி தன் தேவைகளை தானே! தீர்மானிக்கும் நிலைக்கு தன் மகன் வந்துவிட்டான்! என்று, மருத்துவரை அனுகியதாய், தன் கண்களை தன் மகனுக்கு செலுத்த மருத்துவ ஏற்பாடுகள் அனைத்தும் நல்லமுறையில் செய்துமுடிக்கப்பட்டு, தன் மகனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தான் இருளை அடைந்தாலும் "இனி என் கண்களாக என் மகன் இருப்பான்" என்ற மனநிறைவுடன் அவன் கரங்களை பற்றிய படி மெல்ல அவன் தோளில் தன் தலையை சாய்த்தவாரு வீடு திரும்பினாள்.
தன்னை தன் தாய் பார்வை இல்லை என்ற குறை தெரியாத அளவிற்கு அன்போடு அரவணைத்து அவனுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வந்தவளை, அவனும் அதே அன்பு குறையாமல் கவனித்துக்கொள்ள மகன் தன் மனதிற்கு ஏற்றவாரு தன் தாயை பக்குவமாக கவனித்துக்கொள்ளும் அளவில் ஒரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டன்.
மருமகள் என்ற மனப்பான்மையின்றி தன் தாயை கவனிப்பதுபோல் அன்போடு உபசரித்தாள்.
நாளைடைவில் இனிதான இவர்களது இல்லரவாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றேடுத்தாள்.
குழந்தையை தொட்டு தழுவி ஆறுதல் அடைந்தாலும், மருமகளுக்கு உதவியாக குழந்தையை கவனித்து கொள்ள முடியாமல் ஒரு குருட்டுதாயாய் இவர்களுக்கு பாரமாய் இருக்கின்றோமே! என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாய் பதிந்தது.
இதற்கு ஏற்றவாரு நாளைடைவில் குழந்தையையும், தன் கணவரின் தாயாரையும் சரிவர கவனிக்க முடியாமல், சரியான நேரத்தில் இருவரின் தேவைகளை பூர்த்திசெய்ய இயலாமல் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகளுக்கு ஆளானாள்.
அலுவலகம் சென்று வீடுத்திரும்புபவன் நிம்மதியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டான்.
ஒரு பக்கம் தாய், மற்றொரு பக்கம் மனைவி குழந்தை, இவர்கள் மூவரையும் எப்படி நல்லமுறையில் கவனித்துக்கொள்ள போகிறோம் என்ற மனக்குழப்பத்திலேயே நாட்கள் வெகுவாக விரைந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் தன் பார்வையற்ற தாயை கணவன் மனைவி இருவருமே ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்தனர். தன் தாயால் தன் குடும்ப சந்தோஷம் குறைந்து கொண்டேபோகின்றது என்ற மன உளைச்சளில் தன் தாயின் கைகளை பிடித்துக்கொண்டு பொறுமையாக அழைத்து செல்லும்போதே,"நீ! சிறுவயதில் என் கைகள் பற்றிக்கொண்டு பள்ளிக்கு நடந்த நிகழ்வு இன்று என் மகன் கைகளை நான் பற்றிக்கொண்டு நடப்பது நான் செய்த புண்ணியம்" என்று மனதிற்குள் பெருமைப்பட்டுக்கொண்டாள்.
"அம்மா, இதோ! இங்கு அமருங்கள், நான் மாதம் ஒருமுறை எப்படியும் வந்துவிடுவேன்" என்று கூறும்போதே, மகனே உன் நிலை எனக்கு புரிகிறது உன் சந்தோஷமே, என் சந்தோஷம்பா!என்னை தனியே விடாமல்! "ஒரு குடும்பத்தில்" சேர்த்துவிட்டது, மனதுக்கு நிறைவாக உள்ளது. இனி என்னை பற்றிய கவலை உனக்கு வேண்டாம், என்ற புன்னகையோடு மகனை கட்டி அணைத்துவிட்டு, அந்த தாய்! "முதியவர் இல்லம்" உள்ளே நுழைந்தாள்.
குழந்தைகள் எவ்வளவு குறைகளோடு பிறந்தாலும் இறுதிவரை சகிப்புதன்மையின்றி பேணிகாப்பவள் தாய் மட்டுமே! ஏனோ, "குறைபாடுகள் கொண்ட பெற்றோர்களையும், மற்றும் முதிர்வடைந்தவரையும்" பேணிகாக்கும் சகிப்புதன்மை குழந்தைகளாகிய பிள்ளைகளுக்கு வருவதில்லை, பெற்றவர்கள் தெய்வத்திற்கு சமம்! இது ஒரு "அன்பின் ஆலயம்"
நன்றி!
You must be logged in to post a comment.