நாம் சமைக்கும் சாப்பாட்டில் இருந்து தான் ஆரோக்கியம் கிடைக்கிறது. நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு செய்யும் சமையல் கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. சில பொருட்களை மீண்டும் சமைப்பதால் அது விஷமாக மாறும்! அதே போல சில பொருட்களை இப்படி வைத்தால் ருசியும் அதிகரிக்கிறது. இப்படி நமக்கு தெரியாத சமையல் குறிப்புகள் பத்தினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
குறிப்பு 1:
உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்தால் தான் அதன் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பிறகு மீண்டும் சூடேற்றக் கூடாது அது விஷமாக மாறிவிடும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு 2:
ஊறுகாய் தயாரிப்பவர்கள் அதில் சேர்க்கப்படும் எண்ணெயை நன்கு கொதிக்கவிட்டு ஆவி ஆக்கி பின்னர் குளிர வைத்த எண்ணெயில் ஊறுகாய் தயாரித்தால் அவ்வளவு எளிதாக பூஞ்சனம் பிடிக்காது.
குறிப்பு 3:
அடிக்கடி சப்பாத்தி சுடுபவர்கள் அலுமினியம் பாயில் பேப்பர் என்று கேட்டு கடையில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுட சப்பாத்தியை சுற்றி வைத்தால் நீண்ட நேரம் அப்படியே சூடாக இருக்கும். ஃபாயில் பேப்பரை சுற்றி ஹாட் பாக்ஸ் இல் போட்டு வைத்தால் இன்னும் அதிக நேரம் அதே சூட்டுடன் இருக்கும்.
குறிப்பு 4:
வாழைக்காயை கறுத்துப் போகாமல் ஃப்ரிட்ஜில் வைக்க அப்படியே வைக்கக் கூடாது. அதை இரண்டாக வெட்டி ஒரு பேப்பரை சுற்றி வையுங்கள், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது.
குறிப்பு 5:
வெயில் காலங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். இதனை ஈடு கட்டுவதற்கு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை பழச்சாறு, நெல்லிக்காய் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை அடிக்கடி ஜூஸ் போட்டு பருகலாம்.
குறிப்பு 6:
பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் பொழுது சுவை அதிகரிக்க சிறிதளவு பொட்டுக்கடலை மற்றும் சோம்பு அரைத்து சேர்க்கலாம். மசாலா கிழங்கு திக்காக, கிரேவியாகவும் வரும்.
குறிப்பு 7:
முட்டையில் இருக்கும் புரோட்டீன்கள் நமக்கு முழுமையாக கிடைக்க அதை அதிகம் வேக வைக்க கூடாது.மீண்டும் முட்டையை வேக வைப்பதால் ஏற்படக்கூடிய மாற்றம் நம்முடைய உடம்பில் செரிமான மண்டலத்தை மோசமாக பாதிப்படைய செய்து விடும்.
குறிப்பு 8:
காய்கறிகளை சமைக்கும் பொழுது காய்கறிகள் நன்கு வெந்த பின்னர் உப்பு சேர்ப்பதால் அதில் இருக்கும் இரும்புச்சத்து வீணாகாமல் இருக்கும். முன்னரே நீங்கள் உப்பு சேர்த்து விட்டால் இரும்பு சத்து வீணாகிவிடும்.
குறிப்பு 9:
இடியாப்பத்திற்கு மாவு தயாரிக்கும் பொழுது பாலை நன்கு கொதிக்க வைத்து இதனுடன் ஊற்றி இடியாப்பம் பிழிந்தால் நல்ல சுவையாகவும், வெண்மையாகவும், மெத்தென்று மிருதுவாகவும் வெந்து வரும்.
குறிப்பு 10:
மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல் போன்ற வத்தல் குழம்பு வகைகளை செய்யும் பொழுது இறக்கும் பொழுது சுட்ட அப்பளத்தை நொறுக்கி சேர்த்து பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும்.
இரவில் தவிர்க்க வேண்டிய, சேர்க்க வேண்டிய
உணவுகள் என்னென்ன?
அன்றாடம் மூன்று வேளையும் நாம் உணவு உட்கொள்கிறோம்.
காலை, மதியம் எந்தவித கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை.
ஆனால், இரவு உணவில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அளவில் குறைவாகவும், எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இரவில் தவிர்க்க வேண்டிய, சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து டாக்டர் வி.விக்ரம்குமார் விளக்குகிறார்.
ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை?
ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன?
அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்றும் சொல்வதுண்டு. இவை வெறும் வாய்மொழிகள் அல்ல, ஆழமான அர்த்தங்களைக் கொண்டவை.
நமது ஆரோக்கியமும் ஒரு விதமான முதலீடு என்றே சொல்லலாம். எதை, எங்கே, எப்படி முதலீடு செய்கிறோம் என்பதை பொருத்துதான் அதற்கான பிரதிபலன் கிடைக்கும். அதாவது என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம், எந்த அளவு சாப்பிடுகிறோம் என்பதை பொருத்தே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சமச்சீரான முதலீடே நல்ல வருவாயை ஈட்டித்தரும். அதேபோல், சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவே ஆரோக்கியத்திற்கு அடிப்படை. இது கூடுதலாக மன ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வேலை திறனையும் கொடுக்கும்.
உண்ணக்கூட நேரம் இல்லாமல் வேலைக்காக ஓடுகிறோம். ஆனால், வேலைக்காக நேர்த்தியாக உடுப்பதில் நேரம் செலவழிக்காமல் இருக்கிறோமா? வயிற்று பசிக்கு மட்டுமே உண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பொறித்த, வறுத்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையோ அதைவிட அதிகம்.
இதுபோன்ற பல காரணங்களால் ஆரோக்கியம் சீர்கெடுகிறது. அதற்கு காரணம் அவசர யுகம் என்று சொன்னாலும், என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற அறியாமையும் முக்கியமான காரணம்.
நமது ஆரோக்கியத்தை எப்படி பேணுவது? ஆரோக்கியம் தொடர்பாக பல ஆய்வுகள் தொடர்கின்றன. நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சீராக வைத்துக்கொள்ளவும் தேவையான உணவுகள் கொண்ட பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
புரதச்சத்து அதிகம் உள்ளது பாதாம்பருப்பு. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது இது. தினசரி ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 100 கிராம் பாதாம் பருப்பில் 597 கலோரிகள் உள்ளது. விஞ்ஞானிகள் பாதாமுக்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 97.
பாதாமைப் போலவே ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறுவது உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.
அசைவ உணவு உண்பவரா நீங்கள்? உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது கடலில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்கள். ரெட் ஸ்னைப்பர் என்ற மீனில் சிறப்பான சத்துகள் இருந்தாலும், அதில் அபாயகரமான நச்சுத்தன்மையும் உள்ளது. இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சத்துக்கு பதிலாக நச்சை உட்கொள்ள நேரிடும். விஞ்ஞானிகள் இதற்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 69.
சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய், கீனூ மற்றும் சாத்துக்குடி என புளிப்பு சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. சருமத்திற்குக் பொலிவூட்டும் இந்தப் பழங்கள் நமது செரிமாணத்தையும் சீராக்குகின்றன.
அசிடிடி (தேவைக்கு அதிகமான அமிலச் சுரப்பு) பிரச்சனை உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் பழங்கள் ஒரு சஞ்சீவினி என்றே சொல்லலாம். உலகின் எல்லா நாடுகளிலும் விளையும், ஆரஞ்சு பழத்திற்கு விஞ்ஞானிகள் கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.
பொலிவான, அழகான தோற்றம் வேண்டுமா? ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுங்கள். ஆரஞ்சுக்கு சளைத்ததா மாதுளை? மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள் (Antioxidant) கொண்ட மாதுளையில் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களில் ஒருபோதும் குறைபாடு வராது.
பருவநிலை மாறும் இந்த நேரத்தில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இளநீரை மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவில் பூசணி வகைகள் அதிகமாக கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் முலாம்பழத்தில் 34 கிலோ கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50
You must be logged in to post a comment.