சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா திருமணம் ஆன 45 நாளில் தனது மனைவியை அழைத்து கொண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
வித்தியாசமான நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவிக்கு ஒரு தனி இடமே உள்ளது. சீரியல் ஆக இருந்தாலும் சரி ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ரசிகர்களை கவர பல கான்செப்ட்டுகளை கொண்டு வந்து அதை வெற்றி நிகழ்ச்சியாக மாற்றி விடும் பெருமை விஜய் டிவியை சேரும். அந்த வகையில் கடந்த 3 சீசன்களாக ஒளிப்பரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட் ஷோவாக உள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் வைரலாகி விடுகின்றனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் போன சீசனில் கலந்து கொண்ட ரோஷினியின் கணவர் ஜாக்.
இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3ல் கலந்து கொண்டார். அதன் மூலம் அவரின் நடிப்பு திறமை வெளியே கண்டுக்கொள்ளப்பட்டது இப்போது நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வருகிறார். இப்படி பலரையும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலம் ஆனவர்கள் பலர். இந்நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
அப்போது முதலே போட்டியாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. கடந்த வாரம் முதல் 5 ஜோடிகளின் அறிமுகம் நடந்தது. இந்த வாரம் அடுத்த ஜோடிகளின் அறிமுகம் டெலிகாஸ்ட் ஆகிறது. இதில் சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா தனது காதல் மனைவி ஜெஸ்ஸியுடன் கலந்து கொள்கிறார். இந்த ஜோடிகளை ரசிகர்கள் ஏற்கெனவே எதிர்பார்த்தனர். இந்நிலையில் இவர்களின் பங்களிப்பு தற்போது உறுதியாகியுள்ளது. இதுக் குறித்த புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது.
வழக்கம் போல் மாகாபா இந்த புது ஜோடிகளை கலாய்க்கிறார். அஜய் கிருஷ்ணா கல்யாண தேதியை மாற்றி சொல்லி ஜெஸ்ஸிக்கு ஷாக் கொடுக்கிறார். அஜய் - ஜெஸ்ஸி ஜோடிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைப்பெற்றது. இளம் ஜோடிகளான இவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த நிகழ்ச்சியில் போட்டி போட களம் இறங்கியுள்ளனர்.
News18 India
DISTRICT
News18 India
Latest News
ட்ரெண்டிங்
சினிமா
மீம்ஸ்
லைஃப்ஸ்டைல்
ரெசிபி
ஆல்பம்
வீடியோ
Live TV
HOME
/
NEWS
/
ENTERTAINMENT
/
கல்யாணம் ஆன வெறும் 45 நாளில் சூப்பர் சிங்கர் அஜய் - ஜெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு!

அஜய் - ஜெஸ்ஸி
அஜய் - ஜெஸ்ஸி
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தனது காதல் மனைவி ஜெஸ்ஸியுடன் கலந்து கொள்கிறார்.
NEWS18 TAMIL
LAST UPDATED: JULY 07, 2022, 16:22 IST
NEWS18TAMIL.COM
சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா திருமணம் ஆன 45 நாளில் தனது மனைவியை அழைத்து கொண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
வித்தியாசமான நிகழ்ச்சிகளை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவிக்கு ஒரு தனி இடமே உள்ளது. சீரியல் ஆக இருந்தாலும் சரி ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ரசிகர்களை கவர பல கான்செப்ட்டுகளை கொண்டு வந்து அதை வெற்றி நிகழ்ச்சியாக மாற்றி விடும் பெருமை விஜய் டிவியை சேரும். அந்த வகையில் கடந்த 3 சீசன்களாக ஒளிப்பரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட் ஷோவாக உள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் வைரலாகி விடுகின்றனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் போன சீசனில் கலந்து கொண்ட ரோஷினியின் கணவர் ஜாக்.
பாரதி கண்ணம்மா அருண் பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?
தொடர்புடைய செய்திகள்
அப்பாவை பற்றி எனக்கு முன்பே தெரியும். அதிர்ச்சி கொடுத்த எழில்!
எல்லாத்துக்கும் நீதான் காரணம். கண்ணம்மாவை திட்டி தீர்க்கும் பாரதி!
அமீர் - பாவ்னி பற்றி பரவும் அந்த வதந்தி உண்மையா?
கோபியை பார்த்து அப்படியொரு வார்த்தை கேட்ட பாக்கியா!
இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3ல் கலந்து கொண்டார். அதன் மூலம் அவரின் நடிப்பு திறமை வெளியே கண்டுக்கொள்ளப்பட்டது இப்போது நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வருகிறார். இப்படி பலரையும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலம் ஆனவர்கள் பலர். இந்நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
ஜனனியை காணோம்... எதிர் நீச்சல் சீரியலில் பரபரப்பு!
அப்போது முதலே போட்டியாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. கடந்த வாரம் முதல் 5 ஜோடிகளின் அறிமுகம் நடந்தது. இந்த வாரம் அடுத்த ஜோடிகளின் அறிமுகம் டெலிகாஸ்ட் ஆகிறது. இதில் சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா தனது காதல் மனைவி ஜெஸ்ஸியுடன் கலந்து கொள்கிறார். இந்த ஜோடிகளை ரசிகர்கள் ஏற்கெனவே எதிர்பார்த்தனர். இந்நிலையில் இவர்களின் பங்களிப்பு தற்போது உறுதியாகியுள்ளது. இதுக் குறித்த புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது.
வழக்கம் போல் மாகாபா இந்த புது ஜோடிகளை கலாய்க்கிறார். அஜய் கிருஷ்ணா கல்யாண தேதியை மாற்றி சொல்லி ஜெஸ்ஸிக்கு ஷாக் கொடுக்கிறார். அஜய் - ஜெஸ்ஸி ஜோடிக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைப்பெற்றது. இளம் ஜோடிகளான இவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த நிகழ்ச்சியில் போட்டி போட களம் இறங்கியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (The Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:
Television, TV Serial, Vijay TV
You must be logged in to post a comment.