WHY DO YOU NEED TIPS FOR KITCHEN

சமையலறைக்கு தேவையான சின்ன சின்ன டிப்ஸ்... இதோ...

கேரட்டை துருவி பொறியல் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். கேரட்டை ஓரளவு துண்டு துண்டுகளாக வெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு விட்டு விட்டு அரைத்தால் கேரட், துருவிய கேரட் போல நமக்கு கிடைத்துவிடும். சீக்கிரம் கேரட் பொரியல் செய்து எடுத்து விடலாம். அது வேகவும் நேரம் எடுத்துக் கொள்ளாது.

மூடி வைத்திருக்கும் ஃபிளாஸ்கை திரும்பவும் எடுத்து பயன்படுத்தும்போது, அதில் கெட்ட வாடை அடிக்கும். பிளாஸ்க் ஸ்டோர் செய்யும் போது அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மூடி எடுத்து வைத்தால், உள்ளே கெட்ட வாடை அடிக்காது. மீண்டும் பயன்படுத்தும் போது ஒரு முறை வெந்நீரில் கழுவி பயன்படுத்தினாலே போதும்.

நீங்கள் செய்யும் குழம்பு கிரேவி எதுவாக இருந்தாலும் அதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவை கிடைக்க, இறுதியாக அடுப்பை அணைத்து அதற்கு முன்பு அந்தக் குழம்பில் 1 ஸ்பூன் நெய்யை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

எல்லோருக்குமே பூண்டை உரிப்பது கஷ்டமான விஷயம்தான். முதலில் பூண்டை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து விடுங்கள். மேல் காம்பு பக்கத்தை மட்டும் கத்தியை வைத்து நீக்கி விடுங்கள். மேலே தலை பாகம் வெட்டப்பட்ட பூண்டுகளை ஒரு தட்டில் வைத்துவிட்டு, மைக்ரோவேவில் 10 வினாடிகள் வைத்து வெளியே எடுத்தால் போதும். பூண்டின் வால் பகுதியை பிடித்து இழுத்தால் பூண்டில் இருக்கும் தோல் அத்தனையும் வந்து விடும்.

தேங்காய் எண்ணெயை கடையிலிருந்து வாங்கிய உடன் அதில் 10 மிளகை போட்டு வைத்துவிடவேண்டும். 6 மாதம் ஆனாலும் தேங்காய் எண்ணெய் சிக்கு வாடை அடிக்காமல் பிரஷ்ஷாக இருக்கும். இந்த மிளகு போட்டு ஊறவைத்த எண்ணெயை தாராளமாக தலையில் தேய்க்கலாம்.

Milagu benefits in Tamil

கருணைக் கிழங்கை தண்ணீரில் போட்டு வேக வைக்கும் போது கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மஞ்சள் தூள், சிறிய நெல்லிக்காய் அளவு புளியை உருட்டி போட்டு, அந்த கருணைக்கிழங்கை வேக வைத்தால் கிழங்கில் இருக்கும் அரிப்பு இருக்காது. கிழங்கு வறுவல் சுவையாகவும் இருக்கும்.

சர்க்கரை ஸ்டோர் செய்து வைத்திருக்கும் டப்பாவில் மூன்று அல்லது நான்கு ஏலக்காய்களை போட்டு வைத்தால் அந்த சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்கும்.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது முதலில் சிறிது கடலை மாவை எண்ணெயில் வறுத்துவிட்டு, கிழங்கைப் போட்டால் ரோஸ்ட் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.

ஒரு கப் தண்ணீரில் 4 தேக் கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து `மைக்ரோவேவ் அவன்’ உள்ளே ஐந்து நிமிடம் வைத்து எடுங்கள். இப்படி செய்வதால் `அவன்’-ன் உள்ளே இருக்கும் துர்நாற்றம் நீங்கி விடும்.

ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.
முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.

தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது  சுவையாக இருக்கும்.ரசத்துடன் சிறிது மட்டன் சூப்பைச் சேர்த்தால் ரசம் ருசியாக இருக்கும்.
 
தேங்காயைத் துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள், பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில  விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்து விடும்.
 
பஜ்ஜி செய்யும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளை மிளகாய்பொடி, உப்புடன் கலந்து 1/2 மணி நேரம் வைத்திருந்து, பின் பஜ்ஜி மாவில் போட்டு செய்தால் பஜ்ஜி சுவையாய் இருக்கும்.
காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்
 
சமைப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
 
வெண்டைக்காயயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும். சாப்பிடுவதற்கும் மொறு மொறுவென்று இருக்கும்...
 
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
 
சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.
 
 தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.
 
இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்

   அடிக்கடி அப்பளம் பயன்படுத்துபவர்கள் இப்படி செய்தால் நீண்ட நாள் வரை நமத்துப் போகாமல் இருக்கும். பயன்படுத்தி விட்டு மீதியிருக்கும் அப்பளங்களை சரியாக சேமித்தால் மறுமுறை நீங்கள் பயன்படுத்தும் பொழுது புத்தம் புதியதாகவே இருக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சில கல் உப்புக்களை போட்டு அதன் மேல் டிஷ்யூ பேப்பர் வைத்து அப்பளங்களை சேகரித்து வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் நமத்து போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

appalam-fry

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை அதிகமாக வாங்கி வைப்பவர்கள், அதனை நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக எப்படி வைத்திருப்பது தெரியுமா? சாதாரணமாக நாம் அவற்றை டப்பாவில் போட்டு வைத்தால் சில நாட்களிலேயே அவைகள் நமத்து போய்விடும். வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ, அப்படியே இருப்பதற்கு சர்க்கரையை மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வைக்கும் டப்பாவில் டிஷ்யூ பேப்பரை வைத்து அதில் சிறிதளவு சர்க்கரைத் தூளை கொட்டி பின்னர் நட்ஸ் வகைகளை சேகரித்து வைத்தால் நீண்ட நாட்கள் வரை பிரஷ்ஷாக இருக்கும்.

nuts

 

               அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

 

              பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்

 

             தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.

 

              தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.ரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.


              பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்


            தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.


         தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author