வேர்கடலை விவசாயிகளே ஓர் நல்ல செய்தி how

இந்த ஆண்டு வேர்கடலை பயிர் (மணிலா காய்) (கடலைக்காய்) விவசாயம் செய்த விவசாயிகள் அனைவரும் நல்ல இலாபம் ஈட்டி உள்ளனர்,

எப்படி இலாபம் கிடைத்தது:

இந்தியாவில் சமையலில் எண்ணெய் ஏற்றம் செய்யும் நாடுகளில் ஐரோபிய நாடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது,

இதில் ரஷ்யா மற்றும் உக்கிரியின் நாடுகள் சூரியகந்தி சமையல் எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது,

தற்போது இந்த இரண்டு நாடுகளும் போரில் ஈடுபடுவதால் அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை,

எனவே இந்தியாவில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் சூரியகாந்தி சமையல் எண்ணெய் உபயோகிப்போர் தற்போது வேர்கடலை எண்ணெய் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது,

அதனால் சென்ற ஆண்டு 80கிலோ எடை கொண்ட வேர்கடலை பயறு மூட்டை ரூபாய், 5300ல் இருந்து ரூபாய், 6000ம் வரை விற்பனை ஆனது,

இந்த ஆண்டு 80கிலோ எடை கொண்ட வேர்கடலை பயறு மூட்டை ரூபாய், 6200ல் இருந்து ரூபாய், 7000ம் வரை விற்பனை ஆனது,

அதேபோல சென்ற ஆண்டு 40கிலோ எடை கொண்ட வேர்கடலை மூட்டை (காய்ந்தது) ரூபாய், 1800ல் இருந்து ரூபாய், 2300 வரை விற்பனை ஆனது,

இந்த இரண்டு 40கிலோ எடை கொண்ட வேர்கடலை மூட்டை (காய்ந்தது) ரூபாய், 2200ல் இருந்து ரூபாய் 3000மீ வரை விற்பனை ஆனது,

எனவே இந்த ஆண்டு பின்வரும் மாதங்களில் வேர்கடலை ஏற்றுமதிக்கான தேவை அதிக அளவில் உள்ளது,

இந்த ஆகஸ்ட் மாதம் (ஆடி பட்டம்) வேர்கடலை பயிர் செய்யும் விவசாயிகள் அதிக அளவில் லாபம் ஈட்டும் வாய்ப்பு உண்டு.

குறிப்பு:

தமிழக தென்மாவட்ட விவசாயிகளுக்கு மானாவாரி மற்றும் நீர் பாசன வசதி மூலம் பயிர் சாகுபடி செய்பவர்கள் கவனத்திற்கு, 

இந்த ஆண்டு முன்கூடியே பருவமழை தீவிரம் அடையும் என்று கருதப்படும் ஆதலால் பருவ மழை பயிர்களை நாசம் செய்துவிட அனுமதிக்காதவர்

உங்கள் விவசாய நிலங்களை தகவமைத்து பருவ மழையால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். 

உங்கள் பாதுகாப்புகளையும் தாண்டி பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் கவலை வேண்டாம் இன்றைய ஆயில் மார்கெட் சந்தை நிலவரம் மிகச்சிறப்பாக உள்ளது சேதம் அடைந்த வேர்கடலை மற்றும் வேர்கடலை பயிர் நல்ல விலைக்கு விற்க முடியும்.

ஆனால் வேர்கடலை விளைச்சலுக்கு நிர்ணயம் செயப்பட் 90 நாட்களுக்கு குறைவாக அதவாது 75 நாட்கள் அல்லது 85 நாட்களுக்கு குறைவாகவோ பயிர் அறுவடை செய்தால் வேர்கடலை தரம் குறைந்துவிடும் அதாவது வேர்கடலை பயிர் தர குறியீடு முதல் தரம் (50-60 எண்ணிக்கை) இரண்டாம் தரம் (60-70 எண்ணிக்கை) மூன்றாம் தரம் (80-90 எண்ணிக்கை) இந்த தர வேர்கடலை பயிர்களுக்கு தான் நல்ல விலை கிடைக்கும்.

மேலும் வேர்கடலை அதிகபட்சமாக 90 நாட்களில் இருந்து 95 அல்லது 100 நாட்கள் வரை நிலத்தில் அறுவடை செய்யாமல் இந்த 90 முதல் 100 நாட்கள் வரை மழை பொழிந்து பூமியில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வேர்கடலை பயிர் நிலத்தின் மண்ணுக்குள்ளாகவே முளைப்பு விட்டுவிடும்,

மேலும் நல்ல முறையில் அறுவடை செய்த வேர்கடலை மட்டுமே மழை காலங்களில் சூரிய வெளிச்சம் இல்லை என்றாலும் உலர்த்தி பாதுகாத்து கொல்லலாம்,

இதே முளைத்துபோனது மற்றும் கலர் மாறிப்போனது மற்றும் எண்ணெய் கசிர் அடித்து அழுகிய மனம் வீசியது போன்ற வேர்கடலை பயிர்களை விற்பனை செய்வது மிகவும் கடினமான ஒன்று அது மட்டும் அல்லாமல் நீங்கள் இந்த பட்டம் விவசாயத்திற்கு செய்த பணத்தில் மிக அதிகமான தொகையை இழக்க நேரிடும்,

ஏன்னென்றால் இது போன்ற வேர்கடலை பயிர்களை உணவு பொருட்களுக்கான ஈற்றுமதி சந்த்தையில் விற்பனை செய்ய முடியாது மற்றும் ஆயில் மார்க்கெட்டிலும் விற்பனை செய்வது மிகவும் கடினம்,

எப்படி என்றால் முதல் தர வேர்கடலை பயரில் எண்ணெய் அரைத்தால் 80 கிலோ வேர்கடலை பயிருக்கு 35 கிலோ சுத்தமான வேர்கடலை எண்ணெய் கிடைக்கும் ஒருகிலோ வேர்கடலை பயிருக்கு சுமாராக 450 கிராம் வேர்கடலை எண்ணெய் கிடைக்கும் இதை (அவுட்டன்) என்பார்கள் இதில் இருந்து கிடைக்கும் அதாவது புண்ணாக்கு கால்நடைகளுக்கு தீவனம் எனப்படும் உணவாக சிறந்த விலைக்கு விற்கப்படுகிறது.

இரண்டாம் தரமான (60-70) மூன்றாம் தரமான (80-90) இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கு உணவு பொருள் உற்பத்திக்காக விற்பனை செய்யபடுகிறது,

எடுத்துக்காட்டு: கடலை மிட்டாய் தயாரிப்புக்கு அதிக அளவில் பயன்படுத்த படுகிறது மற்றும் வருகடலை கடைகளுக்கு விற்பனை செய்யபடுகிறது மற்றும் சுவிஸ்டால் மற்றும் தெருவோர தின்பண்ட கடைகளுக்கும் விற்பனை செய்யபடுகிறது,

முந்தெரிவித்தது போல் கெட்டுப்போன மற்றும் கலர் மாற்றம் அடைந்த மற்றும் முளைத்து போன வேர்கடலை உள்ளூர் செக் எண்ணெய் அரைக்கும் வியாபாரிகளிடம் மிக குறைந்த விலைகுதான் விற்பனை செய்ய முடியும்,

அதை அவர்கள் செக் ஆடி பாமாயில் மற்றும் இதர எண்ணைகளுடன் கலந்து வேர்கடலை எண்ணெய் என்று விற்பனை செய்வார்கள் இந்த எண்ணெய் விலை மலிவாக கிடைக்கும் இது சுகாதாரம் அற்றது இந்த எண்ணெய் சமயலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், 

உங்களுடைய வேர்கடலைகளை எப்படி யாரிடம் விற்பனை செய்வது உங்களது மாவட்டம் அல்லது தலுகவில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடதில் அல்லது உங்களது கிராமத்திற்கு அனைத்து மாவட்ட வியாபாரிகளும் வருவார்கள் அவர்களிடமும் விற்பனை செய்யலாம், 

தினமும் வேர்கடலை விலை நிலவரத்தை எப்படி தெரிந்து கொள்வது

1, இந்தியா மார்ட் 

2, அக்ரோ கிராப்ட்

இந்த இரண்டு ஆப் களையும் பிளையி ஸ்டோர்ரில் பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்தால் தினமும் விலை நிலவரம் செய்தியாக கிடைக்கும்,

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author

Grounut agent