இந்த பூவுலகில் வாழும் உயிர்களுக்கு முழுமையான மற்றும் முதலாவதான தேவை உணவு மற்றும் தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்கின்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க இந்த நவீன கால வாழ்க்கை முறையில் பல தரப்பட்ட மக்களும் ஒருவர் பின் ஒருவராக எதையோ தேடி ஓடுகின்றனர் . அப்படி அவர்கள் தங்களுக்கான தேவையை அடைய பயணிக்கும் பயணத்தில் பல மனிதர்களை கடந்துதான் செல்கின்றனர் . அப்படி அவர்கள் செல்லும்போது கூடவே பயணிக்கிற பல இன்னல்களை சுமந்து திக்கு தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிற மனிதனை ஏனோ அவன் கண்டு கொள்வதில்லை
மனிதன் தன்னுடைய இலக்கை அடைய அவனுடைய குடும்பம், மனைவி , மக்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறானே தவிர பிற மக்களை பற்றி கவலை கொள்வதில்லை .
இந்த உலகில் விலங்குகள் மட்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதில்லை , மனிதனும் ஒருவனை ஒருவன் சார்ந்தே உள்ளான் . உதாரணமாக ஒரு பிச்சைக்காரன் தனக்கு யாரவது தர்மம் போடா மாட்டார்களா என்று ஒருவரை சார்ந்தும் அந்த தர்மமிடும் நபர் தனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியை நம்பியும் , அந்த முதலாளி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை நம்பியும் அந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு ஒட்டு போடும் மக்களை சார்ந்தும் உள்ளனர் .
ஆனால் எந்த ஒரு மனிதனும் தன்னிலையை மறந்து பிறரை பற்றி மனதில் கொள்வதில்லை , ஆகையால் தான் இந்த வளமும் திறமையும் நிறைந்த நாட்டில் இன்னும் பசியும் பட்டினியும் மக்களை வாடி வதைக்கிறது . என்று பசி என்று மனிதன் ஒருவன் யாசகம் கேட்டு பிறரை சார்ந்து வாழும் வாழ்க்கை நீங்கி சந்தோசம் கிடைக்கிற வழியை மேற்கொள்ளும் அந்த மனிதனே உயர்ந்தவன் . வாழ்கின்ற வாழ்க்கையில் நாமும் நன்றாக வாழ்ந்து நம்மை சுற்றி வாழ்கின்றவர்களையும் சந்தோசமாய் வைத்திருப்போம்
உலகில் உள்ள 400 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாகுறையால் பாதிப்புக்கு உள்ளாவதாக பிரபல கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 2050-ம் ஆண்டு 500 கோடி மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் பாதிப்புக்கு உள்ளாவர் என, ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மக்களின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் மூன்று முக்கிய சவால்களில், தண்ணீர் பஞ்சம் ஒரு மிகப்பெரிய சவால் என, உலக பொருளாதார அமைப்பு கூறுகிறது. by Taboola Sponsored Links Pristine silver that proves, unmatched beauty & craftsmanshipGRT Jewellers சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள் தண்ணீருக்காக எந்தளவுக்கு கஷ்டப்படுகின்றனர் என்பதை நாம் நன்கு அறிவோம். பல இடங்களில் 500, 1000 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. கார்ப்பரேசன் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரையும், காசு கொடுத்து வாங்கும் கேன் தண்ணீரையும் நம்பியே மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை கழித்து கொண்டு இருக்கின்றனர். இது ஒருபுறம் என்றால், விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாகுறை என்பது இதைவிட மிக மோசமாக உள்ளது. ஆறு, குளம், ஏரி போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் 70 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வருடம் முழுவதும் விவசாயம் செய்வதற்கு நம்மிடம் போதிய தண்ணீர் இல்லை. வெளியேறும் விவசாயிகள் முப்போகம் விவசாயம் செய்த பகுதிகளில் ஒரு போகம் விவசாயம் செய்வதற்கே சிரமப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தண்ணீர் பஞ்சத்தால் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். இதனால், கிராமங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைவாய்ப்பிற்காக மக்கள் இடம்பெயர்வது பெருமளவு அதிகரித்து வருகிறது. இந்த எல்லா பிரச்னைகளுக்கும் மழை பொய்த்து போனது தான் காரணம் என சொல்லி கொள்கின்றனர். ஆனால், உண்மையில் மண் வளம் இழந்தது தான் தண்ணீர் பஞ்சத்திற்கான முக்கிய காரணம். உலகின் மிகப்பெரிய நீர் ஊற்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆறுகளும், ஏரிகளும் தான் மழையை சேமிப்பதற்கான இடங்கள் என எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகின் மிகப்பெரிய நீர் ஊற்று மண் தான். மண் மட்டும் போதிய வளத்துடன் இருந்தால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஆறுகளில் இருக்கும் நீரை விட 8 மடங்கு அதிகமான நீரை மண்ணில் சேமிக்க முடியும். மண்ணின் கரிம வளத்தை வெறும் 1 சதவீதம் அதிகரித்தாலே ஏக்கருக்கு சுமார் 75,000 லிட்டர் தண்ணீரை நம்மால் கூடுதலாக சேமிக்க முடியும். அதேபோல், தற்போது நம்முடைய தமிழ்நாட்டு மண்ணின் சராசரி கரிம வளம் 0.68 சதவீதமாக உள்ளது. இதை 8 முதல் 10 சதவீதமாக அதிகரித்தால், விவசாயத்திற்கான நம்முடைய தண்ணீர் பயன்பாட்டை 70 சதவீதம் குறைக்க முடியும். அதாவது, 100 லிட்டர் தண்ணீருக்கு பதிலாக வெறும் 30 லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி நம்மால் விவசாயம் செய்ய முடியும். மரங்கள் வேண்டும் மண் வளத்தை மேம்படுத்த வேண்டுமானால், அதற்கு மரங்கள் அவசியம். நிலத்தில் மரங்கள் இருந்தால், அவற்றின் இலை தளைகள் மண்ணில் விழுந்து அதில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு உணவாகும். மேலும், மழை நீரை தனது வேரின் வழியாக பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இதன்மூலம், மண்ணுக்கடியில் நீர்மட்டம் உயர்ந்து நிலத்தின் ஈரப்பதம் அதிகரித்து பயிருக்கான தண்ணீரின் தேவை குறையும்.மண்ணில் மரங்கள் இல்லாததால் பெய்யும் மழை நீர் பூமிக்கடியில் செல்லாமல் தரையின் மேல்பரப்பில் வெள்ளமாக பாய்ந்து ஓடிகிறது. இதனால், சத்தான மேல் மண் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. மண்ணில் சத்து இல்லாமலும், நிலத்திற்குள் நீரும் இல்லாமலும் எப்படி விவசாயம் செய்ய முடியும்? நீங்கள் நன்கு கவனித்து பார்க்கலாம், எங்கெல்லாம் வெள்ளம் வருகிறதோ, அங்கு அடுத்த சில மாதங்களில் வறட்சி வரும். இப்படி வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வந்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்துவது என்பது தற்காலிக தீர்வு தான். மண் வளத்தை மீட்டெடுப்பது மட்டுமே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நிரந்தர தீர்வு. மண் வளத்தை மீட்டெடுக்காமல் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியாது. Share Dinamalar iPaper by Taboola Sponsored Links You May Like Kingsize Villa Plots on OMR, Chennai @ Rs.2 Crore* Onwards TVS Emerald Born Between 1965-1990? Get ₹1 Cr Term Life Plan @ ₹503/month*.Term Life Insurance Plans Get your LLM degree from India's top Law SchoolPowered by Upgrad MBA in Business Analytics for Working ProfessionalsBITS Pilani Used cars in high demand! Get Top Price for your CarSellRight by Spinny This Desktop App Helps You Write More EffectivelyGrammarly Advertisement » தமிழகம் முதல் பக்கம் Home வாசகர் கருத்து (2) அப்புசாமி - 03-ஜூன்-2022 10:08 கோதாவரி தண்ணீரைக் குடுத்து 130 நாடுகளை காப்பாத்திடுவோம். Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா 03-ஜூன்-2022 09:00 //...மண் வளத்தை மீட்டெடுக்காமல் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியாது....//..மண் வளமா? மலையையே சுத்தமாக சுரண்டி கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யும் திராவிட மாடல் இது. ஆற்று மணல் அனைத்தும் கொள்ளை ... திராவிட மாடல் முன்னேறிய மாநிலத்தில் தனி மனித அடிப்படையில் தண்ணீர் வளம் 900 கியூபிக் மீட்டர். இந்தியா சராசரி 2000 கியூபிக் மீட்டர் .
மனிதனையே மனிதன் நேசிக்கும் நிலை வரும்போது தான் இங்கே மகிழ்ச்சி என்கின்ற தீபம் சுடர்விட்டு எரியும் . ஆகையால் பூவுலகில் அனைவரையும் நேசிப்போம் புது விடியல் ஒன்றை உருவாக்குவோம்
Enjoyed this article? Stay informed by joining our newsletter!
You must be logged in to post a comment.
Subscribe our newsletter to stay updated.
You must be logged in to post a comment.