இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெறவுள்ள நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கான் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பதியில் நடைபெற்றால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் ஜூன் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது. அதற்காக அந்த ஹோட்டலில் 100 காஸ்ட்லியான அறைகளும் புக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என்பதால் மிகப்பெரிய அளவில் ஏகப்பட்ட ஏற்பாடுகளை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செய்துள்ளனர். தண்ணீர் பாட்டில் முதல் நெட்பிளிக்ஸில் திருமணம் டெலிகாஸ்ட் வரை என பல சிறப்பம்சங்கள் களைகட்டுகின்றன.
தென்னிந்திய திரையுலகில் ரஜினி முதல் மம்மூட்டி வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் காரணமாகத்தான் ஷாருக்கான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்க போவதாகவும் கூறுகின்றனர்
நயன்தாரா நவம்பர் 18,1984 ஆண்டு பிறந்துள்ளார். அவரது இயற்பெயர் டயானா மரியா குரியன். விக்னேஷ் சிவன் செப்டம்பர் 18,1985ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர்கள் இருவரின் பிறந்த எண்ணின் முதல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகை 9 வருகிறது. திருமண தேதியும் 9 வருகிறது. அதே நேரத்தில் 18/11/1984 கூட்டுத்தொகை 5 ஆக உள்ளது
விக்னேஷ் சிவன் 18/09/1985ஆம் ஆண்டு பிறந்தார். இந்த எண்ணின் கூட்டுத் தொகை 5ஆக வருகிறது. இவரின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள். இவரின் தந்தை காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர். இவரின் அம்மா வடபழனியில் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார். விக்னேஷ் சிவன் தன்னுடைய பள்ளி படிப்பை மயிலாப்பூர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலும் தனது கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார்.
காதல் பறவைகள்
விக்னேஷ் சிவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். தனுஷ் தயாரிப்பில் 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்கிய பின்னர் அனைவரின் கவனம் ஈர்த்தார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார். எட்டு ஆண்டு கால காதல் கல்யாணத்தில் முடியப்போகிறது.
மண வாழ்க்கை எப்படி
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரே குணாதிசயம் கொண்டவர்கள் ஒரு உறைக்குள் இரண்டு கத்திதான். காரணம் இருவரின் எண்களின் கூட்டுத்தொகையும் ஒரே மாதிரியாக உள்ளது. காதலர்களாக சுற்றித்திரியும் இருவரும் இப்போது திருமண பந்தத்தில் இணையப்போகிறார்கள். திருமணம் செய்து கொள்ளப்போகும் தேதி 09/06/2022 கூட்டுத் தொகை 3 வருகிறது. இது சிறப்பானது அல்ல என்றும் 50 சதவிகிதம் மட்டுமே வெற்றியைத் தரும் என்றும் பிரபல எண் கணித நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இணைத்து வைத்த இறைவன்
விக்னேஷ் சிவன் கன்னி ராசிக்காரர். நயன்தாரா சிம்ம ராசியில் பிறந்தவர். இருவருமே இப்போது திருமண பந்தத்தில் இணைகின்றனர். ஜாதகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே தாமதமாக திருமணம் நடைபெறுகிறது. கடந்த பல ஆண்டுகாலமாகவே இருவரும் இணைந்து பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு பரிகாரங்களைச் செய்துள்ளனர். சமீபத்தில் கூட குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார் நயன்தாரா. முழுக்க முழுக்க தமிழ் பெண்ணாகவே மாறி விட்டார் நயன்தாரா. இத்தனை ஆண்டுகாலம் காதலித்தவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகவே புரிந்து கொண்டுதான் மண வாழ்க்கையில் இணைகின்றனர். இவர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக மாற பரிகாரங்கள் கை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
-
"செக்யூரிட்டி கோட்.." மொபைல் போனுக்கு நோ அனுமதி.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கெடுபிடி -
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம் துவங்கியாச்சு...ஆரம்பமே அசத்துதே -
என்கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்காதீங்க...பிரேமம் டைரக்டர் சொன்ன பகீர் தகவல் -
விக்னேஷ் சிவன் பிரஸ்மீட்டில் நடந்த தள்ளுமுள்ளு..சுரேஷ் சந்திரா உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸில் புகார்! -
இந்து முறைப்படி தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
நயன்தாராவுக்கு மகனாக நடித்த ரித்து ராக்ஸ்.. ஆக்ஸிஜன் இன்றி தவிக்கும் பயணிகள்.. ஓ2 டிரைலர் ரிலீஸ்! -
ஓடிடி.,யில் ஒளிபரப்பாகும் நயன்தாராவின் திருமணம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள் -
ஷாருக்கோட ஜவான் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. சூப்பர் சான்சை மறுத்த சமந்தா.. என்ன காரணம் தெரியுமா? -
நீங்க கண்டிப்பா வரணும்...முதல்வருக்கும் நேரில் சென்று அழைப்பு வைத்த நயன்தாரா–விக்னேஷ் சிவன் -
அட்லியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.. யாரு சொல்லியிருக்காங்க பாருங்க! -
25 டைட்டில்களை நிராகரித்து தேர்வு.. அட்லி -ஷாருக் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜவான் -
நயன்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம்... யாருக்கெல்லாம் அழைப்பு? முழு விவரம் !
-
2022: அனிருத் இசையில் - சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் -
கே எஸ் ரவிகுமாரின் சிறந்த திரைப்படங்கள் -
ஹிந்தி திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் தமிழ் பாடல்கள் -
இயக்குனர் மணிரத்னம் திரைக்கதையில் வெளிவந்த 5 தமிழ் திரைப்படங்கள் -
1990-களில் ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த இளையராஜாவின் பாடல்கள் -
இயக்குனர் மணிரத்னத்தின் சிறந்த திரைப்படங்கள் -
தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ஆயுஷ்மன் குரானா நடித்த ஹிந்தி படங்கள் -
எண்டு கிரெடிட் சாங் என திரைப்படங்களின் இறுதியில் ஒளிபரப்பான பிரபல தமிழ் திரைப்பாடல்கள் -
1980-களில் வெளியான இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள்
English summary





