சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். சிலர் இது நம்மால் சரியாக செய்ய முடியுமா என்று எண்ணி அதை செய்யத் தயங்குவார்கள். எதுக்குங்க பயம் தைரியமா செய்ங்க வெற்றி உங்கள் வசம் தாங்க. எதற்கும் பயப்படாதீங்க உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது. எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. உங்களால் இந்த விஷயத்தை செய்ய முடியுமா என்று கேட்டால் தன்னம்பிக்கையோடு என்னால் நிச்சயம் முடியும் என்று தயக்கமில்லாமல் சொல்லுங்கள். நாம் நினைத்தால் அகிலத்தை வெல்லலாம்.
ஒரு மனிதனிடம் இருக்கும் பயம் ஒரு கட்டத்தில் அவனையே அழித்து விடும். ஒருவனுடைய தயக்கம் அவனை வளர விடாமல் தடுத்து விடும். எந்த ஒரு செயலையும் உங்களால் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தயங்காமல் செய்து முடித்து வெற்றி வாகை சூடுங்கள்.
பயமும் தயக்கமும் இருந்தால் எந்த செயலிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு உங்கள் செயல்களைத் தொடங்குங்கள். பயத்தை தூக்கியெறியுங்கள். வெற்றி வேண்டுமா அப்போ பயத்துக்கும் தயக்கத்துக்கும் குட் பை சொல்லுங்க.
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது.
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...
ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே.
எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்.
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...
பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு...
எந்த சூழ்நிலையிலும் நினைவிருக்கட்டும் பயம் கொள்ளும் தன்னம்பிக்கை வெல்லும்…
சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கிக் கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும்
நம் மனது தான் மிகச் சிறந்த நண்பன்! நம்மை நாமே நேசிப்போம்!
உன்னை நம்பு.
உன் உழைப்பை நம்பு.
உன் முயற்சியை நம்பு.
உனக்காக உதவி செய்வார்கள் என்று யாரையும் நம்பி விடாதே!!
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்.
ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும்தான் வரும்…!
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது “நம்பிக்கை”
மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது தன்னம்பிக்கை
உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்.
வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்.
உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன! மனம் தளராதே!
உன்னை தள்ளிவிட ஆயிரம் கைகள் வரும் ஆனால்
தாங்கி பிடிக்க ஒரே ஒரு கை மட்டுமே வரும் அது உன் தன்னம்பிக்கை மட்டுமே!
பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது.
நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று…
பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது.
நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று…
தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும்
எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை !
எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ
அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும்
எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரமில்லை என்பதே நிதர்சன உண்மை.
எந்த செயலானாலும் சிந்தித்து செய்யுங்கள்!
ஏனெனில் உங்களின் ஒரு செயல், உங்கள் எதிர்காலத்தையே மாற்ற வல்லது.
சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதீர்கள்!
அதுவே உங்கள் வாழ்வில் பெறும் தவறாக மாறவும் வாய்ப்புள்ளது.
இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே.
இறைதொண்டை விட இன்றியமையாததாகும்!
உங்களை அழகிய சிலையாக மாற்றுவதும் கல்லாகவே வைத்திருப்பதும் உங்களால் தான் முடியும். மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. நீங்கள் நினைத்தால் உங்களை சிறந்த நபராக மாற்றிக் கொள்ள முடியும். உங்களுடைய வாழ்வின் லட்சியத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். பிடித்த படிப்பை பிடித்த வேலையைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் இலக்கினை அடையக் கூடிய பாதைகளை வழிமுறைகளை வகுத்திடுங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகில். தீவிர முயற்சியால் வாழ்வின் இலக்கை அடையுங்கள். மற்றவரைப் பார்த்துப் பொறாமைப் படாமல் இருக்கும் இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறலாம். இருக்கும் ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதும் கவலையோடு வாழ்வதும் நம் கையில் தான் இருக்கிறது.
ஒரு குடிசையில் விவசாயி தன் மனைவி ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தான். தன் நிலத்தில் சோளம் நிலக்கடலை போன்றவற்றைப் பயிரிட்டான். அதில் வந்த லாபத்தில் தன் மனைவியின் மூலம் சிறிய தொழில் ஆரம்பித்தான். வீட்டிலேயே மசால் வகைகள் ஊறுகாய் வகைகள் வடகங்கள் நிலக்கடலை மிட்டாய் பலகாரங்கள் போன்றவற்றைச் செய்து விற்பனை செய்வார்கள். அவன் மகன் படித்துப் பட்டம் பெற்றான். எங்கும் வேலை கிடைக்கவில்லை.
பின் ஒருநாள் தந்தை அவனிடம் உன்னிடம் உலகை மாற்றுவதற்கான சக்தி இருக்கிறது. நீ நினைத்தால் எதுவும் சாதிக்கலாம் வா என்னுடன் என்று வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சாரை சாரையாக செல்லும எறும்புகளைக் காட்டி எத்தனை துன்பம் வந்தாலும் தன் இரையை நோக்கிப் பயணம் செய்கிறது எறும்புகள் அதுபோல நாமும் நம்மை செதுக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
வீட்டிற்கு வந்த மகன் தன் தாய் தந்தையரின் தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தான். காலையில் வயல் வேலை பிறகு மசாலா தொழில் என்று பரபரப்பாக வேலை செய்தான். ஆறே மாதத்தில் தன் தந்தையின் பெயரில் ஃபுட் பேக்டரி திறந்துவிட்டான். ஒரு பக்கம் நிலத்தில் காலத்திற்கேற்ப பயிரிடுதல் வீட்டைச் சுற்றிக் காய்கறித் தோட்டம் அதைத் தவிர மசாலா மற்றும் ஊறுகாய் வகைகள் தயாரிப்பதில் புதுமையைப் புகுத்தி வெளிநாடுகளுக்கும ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தான்.
நீங்கள் என்னவாக வேண்டுமென்று முடிவு செய்பவர்கள் நீங்கள் தான். உங்கள் குறிக்கோளை அடைய முயற்சி செய்யுங்கள். நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வில் வெற்றி பெறலாம்.
முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்!
என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!
தவறி விழுந்த விதையே முளைக்கும் போது, தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறக்காதா? நம்பிக்கையோடு எழுவோம்...
செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்!
You must be logged in to post a comment.