இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில டி20 போட்டிகளாக தோல்வியை தழுவி வருகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் கடைசி கட்ட ஓவர்களில் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பதே என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மோசமான பந்துவீச்சு காரணமாக, கோப்பையை இந்தியா தவறவிட்டது.
குறிப்பாக புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. ஆனால், இவ்வளவு பெரிய தொடருக்கு முன் ஒரே ஒரு பும்ரா மட்டும் இருந்தால் போதுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு என்ன காரணமோ, அதே காரணமாக தான் இந்தப் போட்டியிலும் இந்தியா தோற்றது. ஆம் டெத் பவுலிங்கில் சொதப்பியது தான் காரணம்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் மொஹாலியின் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய இன்னிங்ஸ்:
தடுமாற்றம் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்டி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 2 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து கேஎல் ராகுல், சூர்யகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர்.குறிப்பாக கேஎல் ராகுல் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு பேட்டால பதிலடி தந்தார். 35 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய நிலையில், ராகுல் கேட்ச் ஆனார்.
இமாலய இலக்கு இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சூர்யகுமாரும் தனது சிக்சர் வேட்டையை தொடங்க, அவரும் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா இறுதியில் ருத்ரதாண்டவம் ஆடினார். குறிப்பாக கடைசி ஓவரில் கடைசி 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாச, 30 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் கே.எல்.ராகுல் 55 (35), சூர்யகுமார் யாதவ் 46 (25), ஹார்திக் பாண்டியா 71 (30) ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், இந்திய அணி 20 ஓவர்களில் 208/6 ரன்களை குவித்தது.
ஆஸி இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர்கள் ஆரோன் பிஞ்ச், கேமரூன் கிரீன் ஆகியோர் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இதனால், ஸ்கோர் பவர் பிளேவில் கிடுகெடுவெனு உயர ஆரம்பித்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. கிரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார். ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேற, கேமரான் கிரின் 30 பந்துகளில் 61 ரன்கள் விளாச, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி சென்றது. அப்போது உமேஷ் யாதவ் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த பவர் பிளேவில் அக்சர் படேல் பந்துவீச்சில் கிரீன் LBW ஆனார்.
அப்பீல் செய்யவில்லை:
ஆனால், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அப்பீல் செய்யவே இல்லை. பொதுவாக விக்கெட் கீப்பருக்குத்தான் இது மிகச்சரியாக தெரியும். ஆனால், அவர் அப்பீல் செய்யாததால் மற்ற யாரும் அப்பீல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து பௌலர் அக்சர் படேல் இது அப்பீல் செய்திருந்தால் அவுட் எனத் தெரிந்தப் பிறகு ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்கை கோபத்தில் கத்தினார்.
இதனால், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அக்சர் பட்டேலும் ஜாஸ் இங்லிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 4 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வழக்கம் போல் புவனேஸ்வர் குமார் 17வது ஓவரில் 15 ரன்களும், ஹர்சல் பட்டேல் 18வது ஓவரில் 22 ரன்களும் கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. அக்சர் பட்டேலை தவிர வேறு யாரும் பந்துவீச்சில் சோபிக்கவில்லை.
அடுத்து கிரீனுக்கு அக்சர் படேல், கே.எல்.ராகுலும் கேட்சை விட்டனர். இதனால், 30 பந்துகளில் 61 ரன்களை அவர் குவித்தார். இதுதான் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையாக அமைந்து ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 211/6 ரன்களை குவித்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
ரோஹித் கோபம்:
இப்போட்டி முடிந்த பிறகு வீரர்கள் ஓய்வு அறையில் மீட்டிங் நடைபெற்றிருக்கிறது. அப்போது, தினேஷ் கார்த்திக்கை நோக்கி பேசிய ரோஹித் ஷர்மா, ‘‘ஏன் கிரீனுக்கு அப்பீல் செய்யவில்லை. அக்சர் நீங்களும் ஏன் அப்பீல் செய்யவில்லை. அப்பீல் செய்யாததால் தான் ஆட்டம் கையைவிட்டு போனது’’ எனக் கோபத்தோடு கேட்டிருக்கிறார். அப்போது இருவரும் அமைதியாக இருந்ததால், ரோஹித் ஷர்மா கோபத்தில் சில வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ‘‘இதேபோல இன்னுமொரு தவறு நடந்தால், அதுதான் உங்களுக்கு கடைசிப் போட்டியாக இருக்கும்’’ என பகிரங்கமாகவும் ரோஹித் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பந்துவீச்சு மோசம்
இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை. 200 ரன்களை எதிரணி சேஸ் செய்ய விடாமல் தடுக்க நல்ல ஸ்கோராகும். ஆனால் பில்டிங்கில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கி விட்டோம். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டனர்.
திருத்திக்கொள்ள வாய்ப்பு
சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குறைகள், எங்கள் தவறுகளை திரும்பி பார்த்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் 200 ரன்கள் அடித்தாலும் கூட உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது.
திருப்புமுனை
நாங்கள் விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுடைய ஷாட்கள் பிரமாதமாக இருந்தது. நானும் இது போல் சேஸிங் செய்ய இருந்தால் இந்த இலக்கை எட்ட முடியும் தான் என்று நினைத்திருப்பேன்.கடைசி நான்கு ஓவரில் 60 ரன்கள் எட்ட வேண்டும் என்று இலக்கு இருந்தால் நாம் எதிரணி விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும்.

பந்துவீச்சில் மாற்றம்
ஆனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை.ஆட்டத்தில் திருப்புமுனையாக அதைத்தான் நான் கருதுகிறேன். ஒரு விக்கெட் கூடுதலாக எடுத்து இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி ஆகியிருக்கும்.எப்போதும் உங்களால் 200 எண்கள் அடிக்க முடியாது. ஹர்திக் சிறப்பாக ஆடி எங்களுக்கு அந்த இலக்கை பெற்று தந்தார். நாங்கள் பந்துவீச்சில் அடுத்த போட்டிகள் சில மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
You must be logged in to post a comment.