what a terrific murder, தமிழ்நாடே அரண்டு போன ஆளவந்தார் கொலை வழக்கு

 

 
 
 

இது ஒரு உண்மை நிகழ்வு இது அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
ஆகஸ்ட் 28 1952, சென்னைஇந்தியா சுதந்திரம் வாங்கி 5 ஆண்டுகள் மட்டுமே ஆயிருந்துச்சு சென்னை எழும்பூரில் இருந்து அன்னைக்கு சாயந்திர நேரத்தில் கிளம்பினா இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் ரயில் தனுஷ்கோடி நோக்கி போக ஆரம்பிச்சது" போட் மெயில்" என்று அழைக்கப்பட்ட அந்த ரயில் தான் அன்னைக்கி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவுல இருக்குற ஒரே போக்குவரத்து தனுஷ்கோடி வரைக்குமே ரயில போற மக்கள் அங்கிருந்து போர்ட்ல இலங்கையோடு தலைமன்னாருக்கு போவாங்க அப்படி கிளம்பின அந்த ரயில் அடுத்த நாள் காலையில மானாமதுரை நெருங்கிட இருந்துச்சு.3rd கிளாஸ்ல தூங்கிட்டு இருந்த மக்களுக்கு துர் நாற்றம் அடிக்க ஆரம்பிச்சது போகப்போக அந்த துர்நாற்றம் இன்னமும் அதிகமாக வர ஆரம்பித்தது எங்கடா இந்த நாத்தம் அடிக்குது என்று எல்லாருமே தேட ஆரம்பிச்சாங்க கடைசியா ஒரு சீட்டுக்கு கீழே ஒரு டிரங்க் பெட்டி பாக்குறாங்க அந்த ட்ரங்க் பெட்டியில் இருந்துதான் துர்நாற்றம் அடிப்பது என்று கண்டுபிடிக்கிறார்கள் உடனே அங்கு இருந்த ஒருத்தர் இது யாரோட பெட்டியின் எல்லார்கிட்டயும் கேக்குறாரு இந்தப் பெட்டியில் இருந்தால் நாத்தம் வருது இது யாரோட பெட்டியில் சொல்லுங்க என்று கேட்கிறார் ? யார் கிட்ட இருந்து எந்த பதிலும் வரல. உடனே துணிந்து அந்த பெட்டியை வெளியே எடுக்கிறார் அப்போ அந்த பெட்டியில் இருந்து தண்ணி மாதிரி ஒரு திரவம் ரத்தத்தோடு கலந்து வருவதை பார்த்து அலற ஆரம்பிக்கிறார்கள் அந்த நபர் இது எல்லாமே நடந்துட்டு இருக்கும்போது அந்த அறையில் பத்து மைல் தூரத்தில் மானாமதுரை இருந்துச்சு மானமதுரை சேர்ந்ததும் அங்கிருந்த போலீஸ் அந்த ட்ராக் பெட்டியை கீழே இருக்கிறாங்க அந்தப் பெட்டி ரொம்ப கனமா இருந்துச்சு அந்த பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்க அந்த பெட்டியின் பூட்டை உடைக்க படுது அப்போ அங்கிருந்த போலீஸ் மட்டுமில்லாம அங்கு வேடிக்கை பார்க்க வந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போறாங்க அந்தப் பெட்டிக்குள்ள ஆடை எதுவுமே இல்லாம தலையில்லாமல் கைகாலெல்லாம் வெட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் இருந்தது இப்போ இந்த மாதிரியான கொலைகள் எவ்வளவு நடந்தாலும் அந்த காலத்துல இது ரொம்ப பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது ஏன் மெடிக்கல் பாடப்புத்தகத்தில் கூட இது ஒரு மெடிக்கல் பாடமஇருக்கு. இந்த ஆளவந்தார் கொலை வழக்கு தமிழ்நாட்டில் ஏற்படுத்திய விளைவு மிகவும் அதிகம் இந்திய அளவில் இருக்கிற பாரன்சிக் சயன்ஸ் முக்கிய வழக்கா இந்த கேச பதிவு பண்ணி வச்சிருக்காங்க காவல்துறை இப்படி ஒரு கொடூரமான கொலையை யார் பண்ணுங்க போலீஸ் இந்த கொலையை எப்படி கண்டுபிடிச்சாங்க ??எதற்காக இந்த கொலை நடத்தப்பட்டது என்ற இந்த கேஸ் முழுவதும் ஒரு சினிமால வர கதையாகவே இருந்துச்சு இவங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படி ஒரு காட்சியை பார்த்ததுமே காவல்துறைக்கு ஒண்ணுமே புரியல இதுவரைக்கும் எப்படிப்பட்ட கொலை நடந்ததே கிடையாது போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்காக இந்த தலையில்லாத உடல மதுரைக்கு அனுப்புறாங்க எங்கே எப்போ இந்த பெட்டி இந்த ட்ரெயின்ல ஏற்றப்பட்டது என்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில இங்க சென்னையில ஆளவந்தார் என்ற ஒரு தொழிலதிபர் காணாம போயிருக்காரு என்று போலிஸார் ஒரு வழக்கு பதிவு செய்கிறார்கள் இந்த தகவல் “ஹிந்து”பேப்பர்ல வருது. வெள்ளைக்காரன் காலத்துல இந்திய ஆய்வுத்துறையின் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆளவந்தான் தான் அந்த காணாமல்போன தொழிலதிபர். சென்னை ஜார்ஜ்டவுன் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வாழ்ந்துட்டு வந்த ஆளவந்தான்.பாரிஸ் கார்னர் ல அவரது உறவினரான எம் சி குன்னம் செட்டியாரின் பேனா கடை இப்போதும் பிரபலமாக இருக்கு இந்த இடத்தில ஒரு கடையை பிடிச்ச பிளாஸ்டிக் வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்தாரு ஆளவந்தார் அப்ப நா பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிகமா இருந்துச்சு அதுமட்டுமில்லாம அப்பதான் பிளாஸ்டிக் பொருட்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. ஜென்& கோக்கு பேனா வாங்க வர வேண்டும் அங்கு இருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகமா வாங்கினாங்க. நாளடைவில் புடவைகளையும் தவணை முறை விற்க ஆரம்பித்தார் ஆளவந்தார் அப்போ பெண்களுடைய கூட்டம் ஆளவந்தார் கடையை நோக்கி ஈசல் மாரி சுத்தி இருந்துச்சு உண்மையிலே இதற்காகத்தான் ஆளவந்தார் புடவைகள் வியாபாரத்தை கையிலெடுத்தார் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான ஆளவந்தார் பெண்கள் விஷயத்துல அதிகமான நாட்டம். நாளொரு பழக்கம் பொழுதொரு கொண்டாட்டம் என இருந்து வந்தார்.அப்போ ஆகஸ்ட் 28 1952. கடைக்கு போயிட்டு வரேன் சொல்லிட்டு போனா ஆளவந்தார் திரும்ப வரவே இல்லை அதனால ஆளவந்தாரின் மனைவி அவரை தேடி போறாங்க ராயபுரத்தில் இருக்கிற நண்பனை பார்க்க போறேன் சொல்லிட்டு போயிருக்கார் ஆளவந்தார் ஆனா போலீஸ் விசாரணையில் அதை நண்பன் இல்ல ஒரு பொண்ண னு தெரிய வருது, அதுவும் கேரளாவை சேர்ந்த தேவகி என்ற தெரிய வருது அப்படி தேவகி யோட வீட்டில் போய் கேட்கும்போது ஆளவந்தாரின் ஒருத்தர் இங்க வரவே இல்ல அப்படின்னு சொல்லிருக்காரு தேவகியின் கணவர். பிரபாகரன் மேனன் உடனே ஜெம்& கோ குன்னம் செட்டியார் பார்க்க போறாங்க ஆளவந்தாரின் மனைவி உடனே எஸ் காலேஜ்ல இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு வழக்கு கொடுக்கப்பட்டது அதுதான் அடுத்த நாள் காலையில் ஹிந்து பேப்பரில் வந்த காணாமல் போன செய்தி. அதே நேரத்துல இப்போ மதுரை மருத்துவக் கல்லூரியில் இருக்க எஸ்டீம் மருத்துவமனைக்கு தலையில்லாத உடல் அனுப்பப்படுகிறது. அந்த உடலை பிரேத பரிசோதனை செய்த கிருஷ்ணசாமி இந்த உடல் இருபத்தி எட்டு வயது ஒரு இளைஞன் அந்த உடலின் கால்ல சுன்னத் செய்யப்பட்டது அதனால் இது ஒரு இஸ்லாமிய இளைஞன் என்று பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தந்தார் கிருஷ்ணசாமி.இன்னொரு பக்கம் இந்த சென்னையில ஆளவந்தாரை தேடிட்டு இருந்துச்சு சென்னை போலீஸ் நம்பர் 62 சிமெட்ரி ரோடு ராயபுரம் என்ற வீட்டிற்கு சென்று பார்க்கிறார்கள் சென்னை போலீஸ் அப்போ அங்க தேவகியின் வீடு பூட்டப்பட்டு தேவகியும் தேவகியின் கணவரும் அந்த வீட்ல இல்ல.அன்னையிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து ராயபுரம் கடற்பகுதியில் ஒரு தலை உருண்டு வந்துச்சு. உடனே அந்த தலை சென்னை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. அது ஆளவந்தார் உடைய தலையாக இருக்குமோ என்று கண்டுபிடிப்பதற்காக ஆளவந்தாரின் மனைவி அழைத்துவரப்பட்டார் அப்படி அவங்க வந்து பார்க்கும் போது அந்த தலை சிறிது அழுகி இருந்தாலுமே அது ஆளவந்தார் உடைய தலை தான் என்றுஉறுதியளித்தார். இப்போ போலிசுக்கு ஆளவந்தார் கடைசியா பார்க்க போன தேவகி மேல தான் சந்தேகம் அதிகமா இருக்கு ஆனால் தேவகி தன்னுடைய கணவரோட தலைமறைவு ஆயிட்டாங்க. அந்த தலை சென்னை மருத்துவக் கல்லூரியில் இருக்கிற தடையில் துறை மருத்துவரான கோபால் கிருஷ்ணா இந்திய அளவில் புகழ்பெற்ற இவருடைய முடிவுதான் இந்த வழக்கின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. அவர்அந்த தலைய பிரேத பரிசோதனை செய்கிறார். அந்த தலையை பார்த்தவுடனே சில விஷயம் சொல்றாரு இதை நாற்பது வயதான ஒருவரின் தலை கோபாலகிருஷ்ணன் சொன்னதுபோலவே ஆளவந்தாரின் வயது 42 இந்த மனிதரின் உயரம் ஐந்தடி நாலு அங்குலம் என கூறினார் கோபாலகிருஷ்ணன் அதேபோலவே ஆளவந்தாரின் உயரமும் 5 அடி 4 அங்குலம். இந்த மனிதரின் தலை அவர் இறந்த பிறகு கட்டப்பட்டது என்று கூறினார் கோபாலகிருஷ்ணன்.எங்க தலையோட முன் பகுதியிலும் ஆழமான ஒரு அடி இருந்தது.இந்த உடலிலிருந்து உயிர் போறதுக்கு முன்னாடி ஓபியம் என்ற போதைப்பொருள் பயன்படுத்தி இருக்காங்க என்று கூறினார் கோபாலகிருஷ்ணன்

உடனே மதுரையில் இருக்கிறஅரசு மருத்துவ கல்லூரிக்கு லெட்டர் போகுது அந்த 25 வயது இளைஞனின் உடல் சென்னை கல்லூரிக்கு அரசு கல்லூரிக்கு கொண்டு வரப்படுகிறது. கொண்டு வந்த அந்த தலையையும் உடலையும் பொருத்திப் பார்க்கிறார்கள் இரண்டுமே சரியாக பொருந்துகின்றது அப்போ அது ஆளவந்தாரின் உடல்தான் என்று உறுதி செய்கிறார். இது ஆளவந்தார் என்று தெரிந்ததுமே ஏன் ஆளவந்தார் இவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்டார் யார் கொன்றார்கள் என்று விசாரணை ஆரம்பித்தார்கள்?

முழு கதையையும் அறிய பகுதி 2 ஐப் பார்க்கவும்

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Senthamizh - Jul 31, 2022, 9:12 AM - Add Reply

hello

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

About Author