15ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. வழக்கமாக மூன்று சீசன்களுக்கு ஒருமுறை மெகா ஏலம், ஒவ்வொரு சீசனுக்கு இடையில் மினி ஏலமும் நடைபெறும். கடந்த சீசனையொட்டி, மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சீசனுக்காக மினி ஏலம் வரும் டிச. 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து, ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் அடிப்படை தொகை விவரங்களும் சமீபத்தில் வெளியாகின. ரூ. 2 கோடியில் இருக்கிறது, பல்வேறு தொகைகளின்கீழ் வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீர்ரகளின் மீது தான் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சாம் கரன், பென் ஸ்டாகோஸ், கேம்ரூன் க்ரீன் உள்ளிட்டோர் அதிக தொகைகளில் ஏலம் எடுக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், டி20 ஸ்பெஷலிஸ்டான இவர்கள் பேட்டிங், பௌலிங் என ஆல்-ரவுண்ட் திறனுடையவர்கள்.
மேலும், அவர்களின் அடிப்படை தொகை ரூ. 2 கோடியாக உள்ளது. எனவே, தங்கள் அணியை வலுவாக்க மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா என முன்னணி அணிகள் உள்பட அனைத்து அணிகளும் இவர்களை ஏலம் எடுக்க முயற்சிக்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இம்முறை சில குறிப்பிட்ட வீரர்களை வாங்கி அந்த அணியை மேலும் பலப்படுத்தியது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கி அவரை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அதிகம் எதிர்பார்ப்பின்கீழ் இருக்கும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேம்ரூன் கிரீன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் 2023 தொடர் வரையில் கேமரூன் கிரீனின் பணிச்சுமை குறித்து ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், டி20 போட்டியில் ஆல்ரவுண்டர் பங்கேற்பது குறித்த முடிவு என்பது தொடரின் நாள் நெருங்கும்போதுதான் உறுதியாகும் எனவும் கூறியுள்ளார்.>
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அடுத்த 12 மாதங்களில் கிரிக்கெட்டில் கிரீனின் ஒட்டுமொத்த பணிச்சுமை கவலைக்குரியதா? ஆமாம், ஒவ்வொரு வீரருக்கும் இது பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் பலமுறை அதைப் பற்றி பேசியுள்ளோம். ஐபிஎல் தொடருக்கு முன்பு அவர் நிறைய போட்டிகளில் விளையாட உள்ளார். அவருடைய இப்போது எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஐபிஎல் நெருங்கும்போது தான் அவர் சரியான முடிவை எடுக்க முடியும்.
ஐபிஎல் தொடருக்கு முன் ஒன்பது டெஸ்ட் போட்டிகள் மற்றும் சில வெள்ளை பந்து போட்டிகள் என ஐபிஎல் தொடருக்கு முன் இத்தனை போட்டிகளை விளையாடும்போது, அவரின் உடல்நிலை மூன்று மாதங்களுக்கு பின் எப்படி இருக்கும் என்பது யாராலும் கூற முடியாது" என்றார்.
பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. தொடர்ந்து, இங்கிலாந்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் ஆஷஸ் தொடர் நடைபெறும். இதன் நடுவே ஐபிஎல் தொடர் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். எனவே, தொடர்ச்சியாக ஒருவர் இத்தனை போட்டிகளில் விளையாடுவது என்பது பெரிய சிரமத்திற்கு உள்ளாக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான வார்னரும், க்ரீனை ஒருமுறை சரியான முடிவை எடுக்கும்படி எச்சரித்திருந்தார். அதேபோன்று, ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வரலாறையும் படைத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், தங்களது அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசக்கூடாது என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது. எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிவடையும்போது அந்தத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் கிரீன் அதிலிருந்து நான்கு வாரங்கள் வரை பந்து வீசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வீரர்களின் பனிச்சுமையையும் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிச்சயம் அவர் மும்பை அணிக்காக பந்து வீசமாட்டார். அதன் பின்னர் அவர் பந்துவீச வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது உள்ள மும்பை அணி மிகவும் பலமாக இருப்பதினால் அவரை ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.
You must be logged in to post a comment.