TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் நேற்று மாலை வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது என TNPSC தலைவர் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வுக்கு வரும் 28ம் தேதி இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஜூலை 24ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தகவல்:
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்து வருகிறது. கடந்த 2 வருடங்களில் கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. மேலும் TNPSC குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 30ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடைசி மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது .குரூப் 4 பதவியில் மொத்தம் 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள் ஆகும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு குறித்து TNPSC தலைவர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கு விண்ணபிப்போர் எண்ணிக்கை தினம் தினம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும், நேற்று மாலை வரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுவரை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்காத தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு. அறிவுறுத்தப்படுகின்றனர்.
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு ? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 7301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதாலும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதாலும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
T[NPSC:
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது அரசு. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் பட்டதாரிகள் மிகவும் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? – முக்கிய கோரிக்கை!
இந்த நிலையில் சமீபத்தில் TNPSC சார்பில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் (Assistant Director of Co-operative Audit) பணியில் 8 காலிப்பணியிடங்கள் இருந்தது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளாக பிப் 21 என்றும் அறிவித்து இருந்தது. இந்த பணிக்கு சம்பளமாக ரூ. 56,100 – 1,77,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் எம்.ஏ அல்லது எம்,காம் மற்றும் கூட்டுறவு டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படித்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

அதனை தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறி இருந்தனர். இந்த அறிவிப்பு அடிப்படையில் ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குனர் பதவிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment.